பாகிஸ்தானில் பயங்கரவாத எதிர்ப்பு மையத்தை கைப்பற்றி போலீசாரை பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்ற பயங்கரவாதிகள்

Prasu
1 year ago
பாகிஸ்தானில் பயங்கரவாத எதிர்ப்பு மையத்தை கைப்பற்றி போலீசாரை பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்ற பயங்கரவாதிகள்

பாகிஸ்தானின் கைபர் பக்துங்வா மாகாணத்தில் உள்ள பன்னு நகரில் ராணுவ கன்டோன்மென்ட் அமைந்துள்ளது. இதன் வளாகத்தில் பயங்கரவாத எதிர்ப்பு மையம் உள்ளது. 

இங்கு பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பாக கைது செய்யப்பட்ட பலர் அடைத்து வைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வந்தது.

அப்படி ஒரு பயங்கரவாதியிடம் நேற்று முன்தினம் போலீசார் விசாரணை நடத்தி கொண்டிருந்தபோது அவர் திடீரென போலீஸ்காரர் ஒருவரின் துப்பாக்கியை பறித்து சரமரியாக சுட்டார். 

இதில் 2 போலீசார் பலியாகினர். அதை தொடர்ந்து அந்த பயங்கரவாதி அங்கு அடைத்து வைக்கப்பட்டிருந்த மற்ற பயங்கரவாதிகளை விடுவித்தார். 

பின்னர் அந்த பயங்கரவாதிகள் அனைவரும் சேர்ந்து பயங்கரவாத எதிர்ப்பு மையத்தை தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். அங்கிருந்த போலீசார் அனைவரையும் பிணைக்கைதிகளாக பிடித்தனர்.

இதையடுத்து அங்கு ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டனர். அவர்கள் பிணைக்கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டுள்ள அனைவரையும் பத்திரமாக மீட்பதற்காக பயங்கரவாதிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்த பேச்சுவார்த்தை நேற்றும் தொடர்ந்ததாகவும், ஆனால் எந்த சுமுகமான முடிவும் எட்டப்படவில்லை என்றும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில் கைபர் பக்துங்வா மாகாணத்தின் வடக்கு வஜிரிஸ்தான் மாவட்டத்தில் நேற்று காலை பாதுகாப்பு படை வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது தற்கொலைப்படை பயங்கரவாதி ஒருவர் வெடிகுண்டுகள் நிரப்பிய காரை மோதி வெடிக்க செய்ததில் 4 வீரர்கள் படுகாயம் அடைந்தனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!