பிள்ளையார் பற்றிய இன்றைய 5 தகவல்கள். - பாகம் 11
#spiritual
#God
#Pillaiyar
Mugunthan Mugunthan
1 year ago
- விநாயகப்பெருமானுக்கு கணபதி என்றும் ஒரு பெயர் உள்ளது. அதாவது க என்பது ஞானத்தை குறிக்கையில் ண என்பது ஜீவர்களின் மோட்சத்தை குறிக்கிறது. பதி என்னும் பதம் தலைவன் எனப்பொருள்படுகிறது.
- விநாயகருக்கு விநாயகி, வைநாயகி, விக்கேனஸ்வரி, கணேசினி, கணேஸ்வரி ஐங்கினி எனும் பெண்பால் சிறப்பு பெயர்களும் உண்டு.
- விநாயகர் வழிபாடு இலங்கை, இந்தியா பர்மா, கயா, ஜாவா, பாலி, இந்தோனேசியா, சீனா, நேபாளம், திபெத், துருக்கி, மெக்கிச்ககோ, பெரு, எகிப்து, கிரேக்கம், இத்தாலி என பல நாடுகளில் பரவி பல நுாற்றாண்டுகளாக வழிபாடு செய்யப்பட்டு வருகிறது.
- தமிழ்நாடு சென்னையில் உள்ள கோவிலான மத்திய கைலாசத்தில் ஆதியந்த பிரபு விநாயகா் வீற்றிருக்கார். இவர் ஒரு பாதி கணபதியும், மற்றயது மாருதியுமாக இணைந்த ஒரு புதுமையான அமைப்பாக காணப்படுகிறார். இவருக்கு நாமே ஆரத்தி புசை செய்யலாம் என்பது சிறப்பு.
- இந்தியா மும்பையில் கடந்த ஆண்டு சுமார் 2 இலட்சம் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டிருந்தன. இந்த ஆண்டு சுமார் 20 இலட்சம் விநாயகர் சிலைகள் வரை வைக்கப்பட்டுள்ளது.