பிள்ளையார் பற்றிய இன்றைய 5 தகவல்கள். பாகம் - 12

#spiritual #God #Pillaiyar
பிள்ளையார் பற்றிய இன்றைய 5 தகவல்கள். பாகம் - 12
  1. அதிகளவில் பிள்ளையார் சிலைகள் இந்தியாவில் இருப்பதால் அங்கு ஐயர்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பல இடங்களில் பெண்கள் ஐயர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்
     
  2.   விநாயக சதுர்த்தி விழாவை கண்காணிக்க மும்பையில் 4 ஆயிரம் இடங்களில் ரகசிய கண்காணிப்பு கமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது
     
  3.     விநாயகப் பெருமான் பெண் வடிவத்தில் சுசீந்திரத்தில் உள்ள பெருமாள் கோவில் ஒன்றில் காட்சி தருகிறார். இவருக்கு புடவைதான் அணிவிக்கப்படுகிறது. கணேசாயினி என்ற திருநாமத்துடன் இவர் அருள் தருகிறார்
     
  4.   திருநாரையுரில் பொல்லாப்பிள்ளையார் என்று சிற்பியின் உளியால் பொள்ளாத (செதுக்காத) பிள்ளையார் இருக்கார். இவருக்கு பருத்த தொந்தியில்லை. வலம்புரி விநாயகர் இவர். கல்லில் தோன்றியவர். இந்தப்பொள்ளப்பி்ள்ளையார் பிற்காலத்தில் பொல்லாப் பிள்ளையார் என பெயரை பெற்றுள்ளார்
     
  5.  நன்னிலம் புந்தோட்டம் அருகே தும்பிக்கை இல்லப் பிள்ளையாரை காணலாம். இவர் வலது காலை தொங்க விட்டு இடது காலை மடித்து இடது கையை இடது கால் மீது வைத்து வலது கையைச் சற்று சாய்த்து அபய கரமாக விளங்குகிறார்.