பணவீக்கம் அதிகரித்துள்ள நிலையிலும் சுவிட்சர்லாந்தில் கிறிஸ்மஸ் பரிசுப் பொருட்கள் கொள்வனவு அதிகரிப்பு

Prasu
1 year ago
பணவீக்கம் அதிகரித்துள்ள நிலையிலும் சுவிட்சர்லாந்தில் கிறிஸ்மஸ் பரிசுப் பொருட்கள் கொள்வனவு அதிகரிப்பு

 பணவீக்கம் அதிகரித்துள்ள நிலையிலும் இவ்வாறு பரிசுப் பொருள் கொள்வனவிற்கு மக்கள் ஆர்வம் காட்டி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

சராசரியாக ஒருவர் கிறிஸ்மஸ் பரிசுப் பொருட்களுக்காக 343 சுவிஸ் பிராங்குகளை செலவிட திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இது கடந்த 2021ம் ஆண்டை விடவும் 9 பிராங்குகள் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

சுவிஸ் மத்திய வங்கி வட்டி வீதங்களை உயர்த்திய போதிலும், வாடிக்கையாளர்கள் பண்டிகைக் கால கொள்வனவில் அது பெரும் தாக்கத்தை செலுத்தவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

எரிபொருள் செலவு போன்ற பல்வேறு பொருளாதாரச் சுமைகள் காணப்பட்டாலும் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் பரிசுப் பொருட்களை கொள்வனவு செய்வதில் சுவிஸ் மக்கள் பரந்த மனதுமன் செயற்பட்டு வருவதாக அண்மைய ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!