பிரித்தானியாவில் உச்சத்தை எட்டியுள்ள விவாகரத்து விகிதம் ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

Nila
1 year ago
பிரித்தானியாவில் உச்சத்தை எட்டியுள்ள   விவாகரத்து விகிதம்  ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

பிரித்தானியாவில் விவாகரத்து விகிதம் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவு உச்சத்தை எட்டியுள்ளது எனவும், பிரித்தானியர்களிடையே மகிழ்ச்சியின்மை மிக உயர்ந்த மட்டத்தை எட்டும் எனவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

சமீபத்தில் வெளியான தகவலில், பிரெஞ்சு ஊழியர்களைவிடவும் பிரித்தானியர்கள் குறைவான வருவாயை ஈட்டுவதாகவும், பிரித்தானியாவைவிட சுற்றியுள்ள நாடுகளில் அதிக ஊதியம் வழங்கப்படுகிறது என்ற ஆய்வறிக்கை வெளியான நிலையிலேயே, விவாகரத்து மற்றும் மகிழ்ச்சியின்மை தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.

உச்சம் தொட்டுள் பணவீக்கம் வாழ்க்கைத் தரத்தைக் குறைத்துள்ளதால் பிரித்தானியர்களிடையே மகிழ்ச்சியின்மை எப்போதும் இல்லாத அளவுக்கு உயர்வதற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.மேலும், திருமணமான தம்பதிகள் முறையாக பிரிந்து செல்வதை அரசாங்கம் எளிதாக்குவதால், விவாகரத்துகளின் அதிகரிப்பு ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

அது மட்டுமின்றி, பிரித்தானியா மற்றும் வேல்ஸ் பகுதிகளில் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் விவாகரத்தானது 140,000 என்ற எண்ணிக்கையை எட்டும் எனவும்,இது 1971க்கு பின்னர் மிகப் பெரிய எண்ணிக்கை எனவும் தெரிவித்துள்ளனர். இன்னொரு அதிர்ச்சி தகவலாக, அடுத்த இரண்டு ஆண்டுகளில் அரை மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வேலையை இழப்பார்கள், விலைவாசி உயர்வு காரணமாக குடும்பங்கள் இனி சிக்கனமாக வாழும் கட்டாயத்திற்கு தள்ளப்படும் எனவும் கணித்துள்ளனர்.

வரவிருக்கும் புத்தாண்டில் குடியிருப்புகளின் விலையில் சுமார் 8% வரையில் சரிவு ஏற்படும். சராசரியாக ஒரு பிரித்தானிய தொழிலாளர் 2022ல் 35,318 பவுண்டுகள் ஊதியமாக ஈட்டியுள்ள நிலையில், பிரெஞ்சு தொழிலாளர் ஒருவர் 35,667 பவுண்டுகள் ஊதியமாக ஈட்டியுள்ளார்.அதாவது வாரத்திற்கு 38.7 மணி நேரம் வேலை பார்த்துள்ள பிரெஞ்சு தொழிலாளர் ஒருவர் ஈட்டும் ஊதியம். ஆனால் பிரித்தானிய தொழிலாளர் ஒருவர் வாரத்திற்கு 41.3 மணி நேரம் பணியாற்ற வேண்டும்.

இந்த நிலையில், பிரெஞ்சு தொழிலாளர்களின் ஊதியமானது அடுத்த ஆண்டு 1% குறைக்கப்பட்டு 35,462 பவுண்டுகளாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் பிரித்தானியாவில் 2% குறைக்கப்பட்டு, சராசரி ஊழியர்களின் வருவாட் 34,643 பவுண்டுகள் என சரிவடையும் என கூறுகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!