இரவில் நல்லெண்ணெய் கொண்டு வாய்கொப்பளிப்பதால் ஏற்படும் நன்மை.

இரவில் நல்லெண்ணெய் கொண்டு வாய்கொப்பளிப்பதால் ஏற்படும் நன்மை.

நாம் உண்ணும் உணவு பற்களில் இடையில் சென்று சிறு துணிக்கைகளாக படிவது வழக்கம். 

காரதன்மை வாய்ந்த உமிழ்நீர் தவறான உணவு பழக்க வழக்கங்களால் அமிலத்தன்மை கொண்டதாக மாறி நோய் தொற்று தோன்ற காரணமாகிவிடுகிறது. நல்லெண்ணெய் மற்றும் மூலிகை குடிநீர் கொண்டு வாய் கொப்பளித்து வந்தால், உமிழ் நீரின் காரதன்மை பாதுகாக்கப்படும்.

மேலும் அதில் உள்ள மருத்துவ மூலக்கூறுகள் வாயில் உள்ள மென் திசுக்கள் மூலமாக உறிஞ்சப்பட்டு ரத்த ஓட்டத்தில் கலந்து செயல்பட தொடங்கும். தினமும் பதினைந்து மில்லி நல்லெண்ணெயை வாயில் இட்டு பத்து நிமிடங்கள் வாயை நன்கு கொப்பளித்து வந்தால் வாயில் உள்ள அழுக்குகள், பல்லுக்கு இடையில் உள்ள உணவுத் துகள்கள் போன்றவை வெளியேறிவிடும்.

மேலும் தொண்டை வறட்சி, நாவறட்சி, வாய்புண், நாக்கில் உண்டாகும் புண்கள், உமிழ் நீர் குறைவாக சுரத்தல் போன்ற பிரச்சினைகளில் இருந்தும் நிவாரணம் பெறலாம்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!