உலகளாவிய சராசரி மொபைல் வேகத்திற்கான தரவரிசையில் கத்தார் முதலிடம்

Prasu
1 year ago
உலகளாவிய சராசரி மொபைல் வேகத்திற்கான தரவரிசையில் கத்தார் முதலிடம்

நெட்வொர்க் இன்டெலிஜென்ஸ் மற்றும் கனெக்டிவிட்டி இன்சைட்களை (network intelligence and connectivity insights) வழங்கும் நிறுவனமான Ookla மூலம் நவம்பர் 2022-க்கான இன்டர்நெட் ஸ்பீட்டெஸ்ட் குளோபல் இன்டெக்ஸ் (Internet Speedtest Global Index) இப்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஸ்பீட்டெஸ்ட் ரேங்கிங் (Speedtest ranking) பட்டியலில் இந்தியா என்ன இடத்தை பிடித்துள்ளது என்று பார்க்கலாம்.

Ookla's Speedtest Global Index என்றால் என்ன?

Ookla's Speedtest Global Index ஆனது மாதாந்திர அடிப்படையில் உலகம் முழுவதும் மொபைல் மற்றும் நிலையான பிராட்பேண்ட் வேகத்தைத் தரவரிசைப்படுத்துகிறது. உலகளாவிய குறியீட்டிற்கான தரவு ஒவ்வொரு மாதமும் ஸ்பீட்டெஸ்ட்டைப் பயன்படுத்தி, மக்கள் தங்கள் இணைய செயல்திறனைச் சோதிக்கும் நூற்றுக்கணக்கான மில்லியன் சோதனைகளில் இருந்து வருகிறது. நிலையான பிராட்பேண்ட் மொபைல் வைஃபை முடிவுகளும் இதில் அடங்கும்.

முந்தைய மாதத்திற்கான முடிவுகள் மாத நடுப்பகுதியில் அப்டேட் செய்யப்படும். அப்படி புதிப்பிக்கப்பட்ட நவம்பர் 2022-க்கான புதுப்பிக்கப்பட்ட முடிவுகளை Ookla தற்போது வெளியிட்டுள்ளது. 

ஓக்லாவின் கூற்றுப்படி, நவம்பர் மாதத்தில், இந்தியா 18.26 Mbps சராசரி மொபைல் பதிவிறக்க வேகத்தைப் (median mobile download speed) பதிவு செய்துள்ளது. இது கடந்த அக்டோபர் 2022 இல் பதிவு செய்யப்பட்ட 16.50 Mbps ஐ விட சிறந்தது. இதன் மூலம், இந்தியா அதன் உலகளாவிய தரவரிசையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் காட்டியுள்ளது.

இதன் மூலம், இந்தியா 113 இடத்தில இருந்து 105 வது இடத்திற்கு முன்னேறி உள்ளது. இருப்பினும், ஒட்டுமொத்த சராசரி நிலையான பிராட்பேண்ட் வேகத்தில் (median fixed broadband speed) உலக அளவில் தரவரிசையில் இந்தியா ஒரு இடத்தைக் குறைத்து, அக்டோபரில் 79வது இடத்தில் இருந்து இப்போது 80வது இடத்திற்கு நகர்ந்துள்ளது. 

நிலையான சராசரி பதிவிறக்க வேகத்தில் இந்தியாவின் செயல்திறன் அக்டோபரில் 48.78 ஆக இருந்து நவம்பரில் 49.09 Mbps ஆக சிறிது அதிகரித்துள்ளது.

நவம்பர் ஸ்பீட்டெஸ்ட் குளோபல் இன்டெக்ஸின் (Speedtest global index) படி, உலகளாவிய சராசரி மொபைல் வேகத்திற்கான தரவரிசையில் கத்தார் முன்னணியில் 1வது இடத்தில் உள்ளது. அதேசமயம், செனகல் உலகளவில் தரவரிசையில் 16 இடங்கள் முன்னேறியுள்ளது. 

நிலையான பிராட்பேண்ட் பதிவிறக்க வேகத்தில், சிலி முதலிடத்தில் உள்ளது. மேலும் பாலஸ்தீனம் மற்றும் பூட்டான் உலகளவு தரவரிசையில் 14 இடங்களை அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!