தலிபான் விதித்த பெண்களுக்கான பல்கலைக்கழக தடைக்கு சுவிட்சர்லாந்து அரசாங்கம் அதிருப்தி மற்றும் கண்டனம்

Prasu
1 year ago
தலிபான் விதித்த பெண்களுக்கான பல்கலைக்கழக தடைக்கு சுவிட்சர்லாந்து அரசாங்கம் அதிருப்தி மற்றும் கண்டனம்

தலிபான்களின் நடவடிக்கைகளுக்கு சுவிட்சர்லாந்து அரசாங்கம் கடுமையான அதிருப்தியையும் கண்டனத்தையும் வெளியிட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் பெண்கள் பல்கலைக்கழகங்களில் கற்பதற்கு விதிக்கப்பட்டுள்ள தடை தொடர்பில் இவ்வாறு கண்டனம் வெளியிடப்பட்டுள்ளது.

அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய நாடுகளும் எதிர்ப்பையும் கண்டனத்தையும் வெளியிட்டுள்ளன.

சுவிட்சர்லாந்து, அவுஸ்திரேலியா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், நெதர்லாந்து, நோர்வே, ஸ்பெய்ன் மற்றும் ஐக்கிய இராச்சியம் உள்ளிட்ட நாடுகள் கூட்டாக இணைந்து ஆப்கானிஸ்தானுக்கு எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.

திட்மிட்ட அடிப்படையிலும் இரக்கமற்ற அடிப்படையிலும் ஆப்கானிஸ்தான் பெண்கள் மீது தலிபான்கள் அடக்குமுறைகளை பிரயோகிப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நடு நிலையான கொள்கைகளை பின்பற்றுவதாக ஒப்புக்கொண்ட போதிலும், தலிபான்கள் இஸ்லாமிய கடும்போக்குவாத சட்டங்களையே பின்பற்றி வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!