வீட்டில் பிள்ளையாரை வைத்து எப்படி வணங்கினால் சிறப்பு
பிள்ளையார் வழிபாடு அவரவர் சக்திக்கு ஏற்ற விதத்தில் வீட்டில் வைத்து வழிபடலாம்.
மண் பிள்ளையாராயின் சந்தனம், குங்குமம் இட்டு, எருகம்பூ மாலை, அருகம்புல் மாலை ஆகியவை அணிவித்து அலங்காரம் செய்வார்கள். விநாயகருக்கு மிகவும் பிரியமான பத்ரம், வன்னிபத்ரம், அருகம்புல் இவைகள் கொண்டு அர்ச்சனை செய்தால் அதற்கான பலன் ஏராளம் என சொல்லப்படுகிறது.
பின்வரும் 21 வகை இலைகளைக் கொண்டு அர்ச்சனை செய்தால் சிறப்பு -
1) முல்லை-அறம்,
2) கரிசலாங்கண்ணி-இல்வாழ்க்கைக்குத் தேவையானபொருள்,
3) வில்வம்- இன்பம்; விரும்பியவை அனைத்தும்,
4) அருகம்புல் – அனைத்துப் பாக்கியங்களும்,
5) இலந்தை – கல்வி,
6) ஊமத்தை -பெருந்தன்மை,
7) வன்னி – இவ்வுலகில் வாழும் காலத்திலும் சொர்க்கத்திலும் பல நன்மைகள்,
8) நாயுருவி – முகப்பொலிவு, அழகு,
9) கண்டங்கத்திரி – வீரம்,
10) அரளி-வெற்றி.
11) எருக்க – கருவில் உள்ள சிசுவுக்கு பாதுகாப்பு,
12) மருதம் – குழந்தை பேறு,
13) விஷ்ணுக்ராந்தி – நுண்ணறிவு,
14) மாதுளை-பெரும்புகழ்,
15) தேவதாரு – எதையும் தாங்கும் இதயம்,
16) மருவு – இல்லறசுகம்,
17) அரசு – உயர் பதவி, மதிப்பு,
18) ஜாதி மல்லிகை – சொந்த வீடு, பூமி பாக்கியம்,
19) தாழம் இலை – செல்வச்செழிப்பு,
20) அகத்திக் கீரை – கடன் தொல்லையில் இருந்து விடுதலை,
21) தவனம் – நல்ல கணவன்-மனைவி அமைதல்.
இந்த 21 இலைகளைத் தவிர நெல்லி, மருக்கொழுந்து, நோச்சி, கரிசலாங்கண்ணி, மாவிலை, துளசி, பாசிப்பச்சை ஆகிய இலைகளாலும் விநாயகருக்கு அர்ச்சனை செய்யலாம். அர்ச்சனை செய்தபின் பலவிதமான கனிகள், முக்கியமாக நாவல் பழம், மாதுளம் பழம், கொய்யாப்பழம், விளாம்பழம் ஆகியவையால் நைவேத்யம் செய்ய வேண்டும். மேலும் பிள்ளையாருக்கு பாயாசம், வடை, அப்பம் ஆகியவைகளும் முக்கியமாக கொழுக்கட்டை பிடித்தமானது வைத்து படைக்கலாம்.