பிள்ளையார் பற்றிய இன்றைய 5 தகவல்கள். பாகம் 16
#ஆன்மீகம்
#கடவுள்
#பிள்ளையார்
#இன்று
#தகவல்
#spiritual
#God
#Pillaiyar
#today
#information
Mugunthan Mugunthan
1 year ago
- கையில் குடையுடனும் தும்பிக்கையில் அமிர்த கலசத்துடனும் காட்சி தருகிறார் விநாயர் கும்பகோணத்தில். இவர் ஜீரஹர விநாயகர் என்ற திருநாமம் கொண்டுள்ளார்.
- பெருமாள் கோவிலில் தும்பிக்கை ஆழ்வார் என்ற திருநாமத்துடன் விநாயகர் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறார்.
- சுவாமி மலையில் உள்ள முருகன் கோவிலில் நேத்ர கணபதி என்ற திருநாமத்தில் விநாயகர் கண்பார்வை கோளாறு உடைய அடியார்களுக்கு கண்கொடுக்கும் கணபதியாக திகழ்கிறார்.
- மருதமலை முருகன் கோவில் அடிவாரத்தில் தான் தோன்றி விநாயகர் அரை அடி உயரத்தில் காணப்படுகிறார்.
- சீனா, ஜப்பான், தாய்லாந்து, கம்போடியா, மியான்மர், மங்கோலியா. திபெத் ஆகிய நாடுகளில் பிள்ளையாரை பௌத்த மக்களும் வணங்குகின்றனர். சீனாவில் உள்ள விநாயகர்கள் 1400 வருடங்கள் பழமை வாய்ந்தவை.