அமெரிக்காவில் உறைந்த ஏரியில் விழுந்து உயிரிழந்த தம்பதியரின் பிள்ளைகளை இந்தியாவுக்கு அழைத்து வர ஏற்பாடு

#India #America #Death
Prasu
1 year ago
அமெரிக்காவில் உறைந்த ஏரியில் விழுந்து உயிரிழந்த தம்பதியரின் பிள்ளைகளை இந்தியாவுக்கு அழைத்து வர ஏற்பாடு

டாலர் தேசமான அமெரிக்கா, பனிப்புயலாலும், பனிப்பொழிவாலும் பனிப்பிரதேசமாக மாறி இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். 

10 லட்சத்துக்கும் மேற்பட்ட அமெரிக்கர்களும், கனடா மக்களும் இந்த பனிப்புயலால் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகிறார்கள். 

இந்த நிலையில், அங்கே அரிசோனா மாகாணத்தில் வசித்து வந்த இந்திய தம்பதியர், நாராயண முத்தனா (வயது 49), ஹரிதாவுக்கு, 12 மற்றும் 7 வயதில் உள்ள தங்கள் இரு செல்ல மகள்களோடு இன்பச்சுற்றுலா செல்ல ஆசை வந்தது. 

அதற்கு காரணம் இருந்தது. ஹரிதாவின் பிறந்த நாளை இப்படி வெளியே போய் கொண்டாட வேண்டும் என்று. 6 பெரியவர்கள், 5 குழந்தைகளைக் கொண்ட 3 குடும்பங்கள் தங்கள் பகுதியில் இருந்து பனிவெளிகளை பார்த்து ரசித்து அனுபவிக்க, கடந்த 26-ந் தேதி காரில் புறப்பட்டார்கள். 

அங்கே கோகோனினோ கவுண்டிக்கு சென்றார்கள். உறைந்து போன உட்ஸ் கேன்யன் ஏரிக்குச் செல்லவும் ஆசைப்பட்டார்கள். போனார்கள். 

உறைந்து போன ஏரியைப் பார்த்ததும், நாராயண முத்தனா, ஹரிதா, அவர்களது நண்பர் கோகுல் சேத்தி (47) ஆகியோருக்கு, அதில் நடக்கவும், அதைப் படம்பிடிக்கவும் ஆசை வந்தது. அந்த ஆசையையும் நிறைவேற்றிக்கொண்டார்கள். 

பாவம், அவர்களுக்குத் தெரியாது, இந்த மகிழ்ச்சி நிலைத்திருக்கப்போவதில்லை, அடுத்த சில நிமிடங்களில் அது துயரமாக உருவெடுக்கப்போகிறது என்பது அப்போது அவர்களுக்கு தெரிந்திருக்க ஒரு நியாயம் இல்லை.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!