உக்ரைன் நாட்டில் நடக்கும் போரில் தற்போது வரை 7000 மக்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர் - ஐ.நா அறிக்கை

#Ukraine #Russia #War #people #Death #UN
Prasu
1 year ago
உக்ரைன் நாட்டில் நடக்கும் போரில் தற்போது வரை 7000 மக்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர் - ஐ.நா அறிக்கை

ரஷ்யா, கடந்த பிப்ரவரி மாதத்தில் உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுக்க தொடங்கியது. அந்த போர், சுமார் 10 மாதங்களாக நீடித்துக் கொண்டிருக்கிறது. 

இந்த, கடும் போரில் உக்ரைன் நாட்டின் பல நகர்கள் சேதமடைந்துள்ளது. இந்நிலையில் உக்ரைன் நாட்டில் தற்போது வரை  போரில் அப்பாவி பொதுமக்கள் 7 ஆயிரம் பேர் உயிரிழந்ததாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையம் தகவல் வெளியிட்டுள்ளது.

இது குறித்து வெளியான அறிக்கையில், போர் தொடங்கப்பட்ட கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி முதல் கடந்த 26 ஆம் தேதி வரை குழந்தைகள், பெண்கள் உட்பட 6884 நபர்கள் உயிரிழந்துள்ளனர். 

10,947 பேருக்கு காயம் ஏற்பட்டிருக்கிறது. மேலும், ரஷ்யப்படையினர் கைப்பற்றிய நகர்களில் நடந்த தாக்குதலில் 483 நபர்கள் உயிரிழந்ததோடு, 1163 பேருக்கு காயம் ஏற்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!