இந்துக்கள் கடைப்பிடிக்கும் பிரம்ம மூகூர்த்தம் என்றால் என்ன ?
இந்துக்கள் ஆகிய நாம் பல சுப காரியங்கள் செய்வது வழக்கம். அப்போது எமக்கு தொடங்குவதற்கான ஒரு நேரம் காலம் உண்டு. அதனை நாம் ஒரு சுப மூகூர்த்தத்தில் செய்வதனால் அது வெற்றியடையும். அதிலே பிரம்ம முகூர்த்தம் என்பது காலை 4.30 மணி முதல் 6 மணி வரையாகும்.
பிரம்மனுடைய பத்தினி சரஸ்வதி தேவி விழித்துச் செயற்படும் நேரம் பிரம்மமுகூர்த்தம் என்பதும் நம்பிக்கை. இதனால் இந்நேரம் சரஸ்வதி யாமம் எனவும் அழைக்கப்படுகின்றது.
இந்த பிரம்ம முஹூர்த்தம் என்பது பிரம்மா சிவபெருமானை நினைத்து அற்புத வரங்களை பெற்றதால் பிரம்ம முஹூர்த்தம் என்ற சொல் வழக்கில் வந்தது.
படைப்பு கடவுளான பிரம்மா நீண்டகாலமாக உறங்கிவிட்டதால் அவரை உறக்கத்திலிருந்து எழுப்பிய சிவபெருமான்.. இந்த கலியுகத்தை அதாவது பிரம்மாவின் இரவை பிரம்மாவின் பகல் ஆக்கவேண்டும் அதாவது சத்யுகம் என்ற உலகத்தை இந்த பூமியில் ஏற்படுத்தவேண்டும் என்று பிரம்மாவிற்கு கட்டளை இட்டார்..
பிரம்மாவும் அதன்படி பூமியின் கணக்குப்படி நாள் முழுவதும் இறைவனுடைய நினைவில் இருந்தாலும் அதிகாலை என்ற பிரம்ம முஹூர்த்தத்தையும் சந்தியா காலத்தையும் மிக சிறப்பான பயிற்சிக்காக சிவபெருமான் கட்டளைப்படி பயன்படுத்தினார்.. பிரம்மாவே இந்த அதிகாலை நேரத்தில் சிறப்பு பயிற்சி செய்ததால் அவரின் பெயராலேயே பூமியின் கணக்குப்படி அதிகாலை 4-5வரை பிரம்ம முஹூர்த்தம் என்றே அழைக்கப்படுகின்றது.
இந்த நேரத்தில் நாமும் விழித்திருந்து குளித்தோ..முடியாதவர்கள் கை,கால்களை அலம்பி பல் துலக்கி தன்னை நெற்றியின் மத்தியில் வசிக்கும் ஒரு ஒளியான ஆத்மா என்று உணர்ந்து பரமாத்மா சிவனை ஒரு உடலற்ற ஒளியாக நினைவு செய்ய பிரம்மா எந்த சக்தியை அடைந்தாரோ அப்படிப்பட்ட அளவிடமுடியாத சக்தியை ஈஸ்வரனிடமிருந்து நாமும் அடையமுடியும்.
● சூரியன் உதித்தெழுவதற்கு நாற்பத்தெட்டு நிமிடங்களுக்கு (விடியற் காலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை உள்ள காலம்) முன் பிரம்ம முகூர்த்தம் ஆரம்பமாகின்றது.
● பிரம்ம முகூர்த்தம் என்பது பிரம்மன் என்றால் நான்முகனைக் குறிக்கின்றது.
● சிவபெருமானின் பெருங்கருணையினால் தான் படைத்தற் தொழிலைப் புரியும் நான்முகன் ( பிரம்மன்) தன்னுடைய நாவில் சரஸ்வதியை அமரச் செய்து 24 கலைகளையும் படைத்தார்.
● காலை 4.30 மணி முதல் 6 மணிக்குள்ளான வேளைக்கு பிரம்ம முகூர்த்தம் என்று பெயர்.
- இரவில் உறங்கும் உயிர்கள் மீண்டும் எழுந்திருப்பதே ( மரணத்திற்கு ஒத்திகை போன்றது) சற்றேறக்குறைய மறுபிறவிதானே!
எனவே, ஒவ்வொரு நாளும் காலையில் மறு பிறவி பெறுவதை சிருஷ்டி (படைத்தல்) என்று சொல்லலாம். இத்தொழிலை சிவபெருமானின் பெருங்கருணையால் செய்பவர் பிரம்மா.
பிறகு நமது வேலைகளைச் செய்ய துவங்கினால் அன்று முழுவதும் உடலும், உள்ளமும் உற்சாகத்துடன் இருக்கும்.
பிரம்ம முகூர்த்தத்தில், வீட்டில் பூஜை அறையில் விளக்கேற்றி வழிபடுவதன் மூலம் சகல சௌபாக்கியங்களையும் பெறலாம் என்பது ஐதீகம்.
பிரம்மமுகூர்த்தத்தில் அவன் செய்யும் ஜெபம் அவன் செல்லும் இடமெங்கும் அவனை அறியாமலே நன்மைகளை விளைவிக்கின்றது.
அதிகாலையில் எழுவதும், படிப்பதும் சிறந்தது என பெரியவர்கள் கூறுவார்கள். இதை இன்று விஞ்ஞானமும் ஏற்றுக் கொண்டுள்ளது.
இந்த நேரத்தில் கண்டிப்பாக தூங்கக் கூடாது. தியானம், வழிபாடு போன்ற பயனுள்ள பணிகளைச் செய்யவேண்டும். இந்த நேரத்தில் செய்யும் வழிபாடு பலமடங்கு புன்ணியத்தை தரும்.
மேலும், விஞ்ஞான ரீதியாக அதிகாலையில் எழும்போது; நமது மூளையும், இன்னபிற உறுப்புகளும் பூரண ஓய்வு பெற்று வேலை செய்ய தயாராக இருக்கும்!!