சூரிய மண்டலத்தில் உள்ள அனைத்துக் கோள்களையும் பார்க்க பிரித்தானிய மக்களுக்கு அரிய வாய்ப்பு

#world_news #UnitedKingdom #people #Singapore
Nila
1 year ago
சூரிய மண்டலத்தில் உள்ள அனைத்துக் கோள்களையும்  பார்க்க பிரித்தானிய மக்களுக்கு அரிய  வாய்ப்பு

பிரித்தானிய மக்கள், சூரிய மண்டலத்தில் உள்ள அனைத்துக் கோள்களையும் பார்க்கும் வாய்ப்பு கிடைககவுள்ளது.

எதிர்வரும் 5ஆம் திகதி வியாழக்கிழமை இரவில் ஆகாயத்தில் இதனை பார்வையிடும் வாய்ப்பை பிரித்தானிய மக்கள் பெற்றுள்ளனர்

அதற்கமைய, 5 கோள்களை ஆகாயத்தில் நேரடியாகப் பார்க்கலாம். தொலைதூரத்தில் இருக்கும் யுரேனஸ் (Uranus), நெப்டியூனைத் (Neptune) தொலைநோக்கியைப் பயன்படுத்திப் பார்க்கலாம்.

பிரித்தானியாவில் புதன் (Mercury), வெள்ளி (Venus) ஆகிய கோள்களைக் காண்பது சவாலாக இருக்கலாம்.

சிங்கப்பூரைப் போல நிலநடுக்கோட்டுக்கு அருகே உள்ள நாடுகளில் வசிப்பவர்கள் கிரகங்கள் அனைத்தும் வானத்தில் ஒரே கோட்டில் தோன்றுவதைக் காணலாம் என்று கூறப்பட்டது.

நட்சத்திரங்களைப் போல கோள்கள் மின்னுவதில்லை. சனியும் (Saturn) வியாழனும் (Jupiter) ஒளிமயமாகத் தோற்றமளிக்கும். செவ்வாய் (Mars) சிவப்பு நிறமாக இருக்கும்.

சூரிய அஸ்தமனத்திற்குச் சிறிது நேரத்துக்குப் பிறகு அந்தக் காட்சி சிறப்பாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!