சீன எதிர்ப்பை மீறி தைவானிற்கு ஆயுதங்கள் விற்பனை செய்ய ஒப்புதல் அளித்துள்ள அமெரிக்கா
சீனாவின் கடும் எதிர்ப்பையும் மீறி தைவானுக்கு, அமெரிக்க தலைவர்களின் வருகை மற்றும் தைவான் அமெரிக்க இடையேயான போர் பயிற்சி ஆகிய காரணங்களால் தைவான் எல்லையில் சீனா போர் பயிற்சி மேற்கொண்டது.
இதனால் இரு நாடுகளுக்கிடையே போர் பதற்றம் நிலை வருகிறது. இந்நிலையில் அமெரிக்கா தைவானிற்கு 14895 கோடி மதிப்பிலான ஆயுதங்கள் விற்பனை செய்ய ஒப்புதல் அளித்துள்ளது. பல்வேறு நவீன தொழில்நுட்பங்கள் அடங்கிய ஆயுத தொகுப்பு தைவான் எல்லையில் பாதுகாப்பை மேம்படுத்த உதவும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
மேலும் இந்த ஒப்பந்தத்தின் மூலம் அரசியல் நிலைத்தன்மை, ராணுவ சமநிலை மற்றும் இரு நாடுகளுக்கிடையேயான பொருளாதாரத்தை மேம்படுத்த உதவும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம் ஒரு பில்லியன் மதிப்பிலான ஆயுதங்கள் தைவானிற்கு வழங்கப்படும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்த நிலையில், தற்போது மீண்டும் ஆயுதங்கள் வழங்க ஒப்புதல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.