2023ல் பெட்ரோல், டீசல் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை- பாகிஸ்தான் நிதியமைச்சர் உறுதி

#Pakistan #Minister #Fuel #prices #2023
Prasu
1 year ago
2023ல் பெட்ரோல், டீசல் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை- பாகிஸ்தான் நிதியமைச்சர் உறுதி

பொருளாதார நெருக்கடி, பணவீக்கத்தால் பாகிஸ்தானில் பெட்ரோலிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் சாதாரண மக்கள் அவதியடைந்து வருகின்றனர். 

டீசல் லிட்டருக்கு ரூ.227.80 ஆகவும், பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.214.80 ஆகவும் விற்பனையாகிறது. ஒரு லிட்டர் மண்ணெண்ணெய் விலை ரூ.171.83 காசுகளாக விற்கப்படுகிறது. 

மோட்டார் பம்புகளை இயக்க வசதியானவர்கள் மண்ணெண்ணையை பயன்படுத்துகின்றனர். விவசாயிகள் லேசான வகை டீசலை பயன்படுத்தி வருகின்றனர். 

அதன் விலை ஒரு லிட்டர் ரூ.169 ஆக உள்ளது. இதன் விலை குறையும் என தகவல்கள் வெளியாகின. 

இந்நிலையில் பெட்ரோலிய பொருட்கள் விலை குறித்து தொலைக்காட்சி ஒன்றில் உரையாற்றிய பாகிஸ்தான் நிதியமைச்சர் இஷாக் தர், நடப்பாண்டுவரை பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இருக்காது என்று தெரிவித்தார். 

லேசான டீசல் விலை அதே அளவில் நீடிக்கும் என்றும் அவர் கூறினார். பிரதமர் ஷபாஸ் ஷெரீப் வழிகாட்டுதலின் பேரிலும், தற்போதைய சூழலை கருத்தில் கொண்டும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!