இன்றைய வேத வசனம் 02.01.2023: இஸ்ரவேலை ஆளப்போகிறவர் உன்னிடத்திலிருந்து புறப்பட்டு...வருவார்

#Bible #Prayer
Prathees
1 year ago
இன்றைய வேத வசனம் 02.01.2023: இஸ்ரவேலை ஆளப்போகிறவர் உன்னிடத்திலிருந்து புறப்பட்டு...வருவார்

எப்பிராத்தா என்னப்பட்ட பெத்லகேமே, நீ... சிறியதாயிருந்தும், இஸ்ரவேலை ஆளப்போகிறவர் உன்னிடத்திலிருந்து புறப்பட்டு...வருவார். மீகா 5:2

1883இல் ப்ரூக்ளைன் பாலம் கட்டிமுடிக்கப்பட்டபோது, அதுவே “உலகத்தின் எட்டாம் அதிசயம்” என்று கருதப்பட்டது. ஒரு கோபுரத்திலிருந்து அடுத்த முனையிலிருக்கும் கோபுரத்திற்கு கட்டப்பட்டிருந்த ஒரு கேபிள் கம்பியானது அதைத் தாங்குவதற்கு போதுமானதாக வடிவமைக்கப்பட்டிருந்தது.

ஒரு பெரிய கேபிள், மற்ற மூன்றையும் ஒன்றாக இணைக்கும் வரை கூடுதல் கம்பிகள் முதலில் சேர்க்கப்பட்டன.

கடைசியில் ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட துத்தநாகப் பூச்சு பூசப்பட்ட கம்பிகள் இணைக்கப்பட்டு, அந்த தொங்குபாலம் அக்காலத்தில் தாங்குவதற்கு ஏற்ற விதத்தில் அமைந்தது. சாதாரணமான ஒன்றிலிருந்து துவங்கி ஆச்சரியமான ஒரு படைப்பாய் இந்த பரூக்ளின் பாலம் மாறியது. 

இயேசுவின் வாழ்க்கை வெகு சாதாரணமாய் துவங்கியது. ஒரு சிறிய பட்டணத்தில் வைக்கோல் வைக்கப்பட்டிருந்த இடத்தில் இந்த குழந்தை பிறந்தது (லூக்கா 2:7). இந்த எளிமையான பிறப்பை மீகா தீர்க்கதரிசி, “எப்பிராத்தா என்னப்பட்ட பெத்லகேமே, நீ யூதேயாவிலுள்ள ஆயிரங்களுக்குள்ளே சிறியதாயிருந்தும், இஸ்ரவேலை ஆளப்போகிறவர் உன்னிடத்திலிருந்து புறப்பட்டு என்னிடத்தில் வருவார்” (மீகா 5:2; காண்க மத்தேயு 2:6). எளிமையான துவக்கத்தைக்கொண்ட இந்த ராஜா மற்றும் மேய்ப்பர் “பூமியின் எல்லைகள் பரியந்தமும் மகிமைப்படுவார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது (மீகா 5:4). 

இயேசுவின் வாழ்க்கை வெகு எளிமையாய் துவங்கியது. அவருடைய பூமிக்குரிய வாழ்க்கையானது,  “சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி,” தம்மை தாழ்த்தி, ஒரு குற்றவாளியாய் சிலுவையில் மரிக்க அனுமதிக்கப்பட்டது (பிலிப்பியர் 2:8). அவருடைய விலையேறப்பெற்ற அந்த தியாகத்தினால் தேவனுக்கும் நமக்கும் இருந்த இடைவெளியை அவர் பூர்த்திசெய்து, அவரை விசுவாசிக்கிறவர்களுக்கு இரட்சிப்பை அருளினார்.

இந்த பண்டிகை நாட்களில், கிறிஸ்து என்னும் தேவனுடைய இந்த விலையேறப்பெற்ற பரிசை நீங்கள் பெற்றுக்கொள்ளலாம். நீங்கள் அவரை விசுவாசிக்கக்கூடுமானால், அவர் செய்த நன்மைகளுக்காய் அவரை தாழ்மையாய் துதியுங்கள். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!