அம்மன் எனும் நம் தெய்வத்தாயின் மற்ற ரூபமான பாலாம்பிகை வரலாறு... பாகம் - 1

#கடவுள் #வாலையம்மன் #அம்மன் #திரிபுரசுந்தரி #சித்தர்கள் #goddess #valaiamman #amman #thiripurasundari #siththar
அம்மன் எனும் நம் தெய்வத்தாயின் மற்ற ரூபமான பாலாம்பிகை வரலாறு... பாகம் - 1

அண்டமெல்லாம் விளங்கும் ஒப்பற்ற சக்தியாக இருக்கக் கூடிய அன்னை பராசக்தியின் பல்வேறு ரூபங்களை நாம் பூஜித்து வருகிறோம்.

இருப்பினும் நமது செந்தமிழ்நாட்டில் வாழ்ந்தும், வாழ்ந்து கொண்டும் இருக்கின்ற சித்த புருஷர்கள் இறை நிலையை அடைய யோக முறைகளையும், பூஜை முறைகளையும் பின்பற்றி வருகின்றனர்.

சிவ வழிபாடு அனைத்து சித்தர்களும் செய்து வந்தது நாம் அனைவருமே அறிவோம். இருப்பினும் அந்த சித்த நிலையை அடைய வேண்டிய சக்திகளை பெறுவதற்கு சில இரகசிய வழிபாட்டு முறைகளை செய்து வந்துள்ளனர்.

அப்படி அவர்களின் வழிபாட்டில் இருந்த ஒப்பற்ற சக்திகளை வழங்கிய வழிபாடே “வாலையம்மன்“ (பாலா) வழிபாடு ஆகும்.

இந்த வாலையம்மன் வழிபாடும் சிறு பெண் குழந்தை வழிபாடே ஆகும். பெண்மை என்றாலே சக்தி, வீரம், ஞானம், தாய்மை, கருணை என அனைத்து குணங்களும் நிரம்பியிருக்கும்.

அன்னை லலிதா திரிபுரசுந்தரி பண்டாசுரவதத்தின் போது தன் படைகளை திரட்டி மந்திரி மற்றும் படைத் தளபதியாக மாதங்கி மற்றும் வாராகியை வைத்து யோகினி சேனைகளுடன் சென்று போர்ப்புரிந்தாள்.

அன்னை லலிதா திரிபுரசுந்தரி பண்டாசுரவதத்தின் போது தன் படைகளை திரட்டி மந்திரி மற்றும் படைத் தளபதியாக மாதங்கி மற்றும் வாராகியை வைத்து யோகினி சேனைகளுடன் சென்று போர்ப்புரிந்தாள்.

இவ்வம்பிகை பற்றிய மேலும் தகவல்கள் அடுத்த வெள்ளிக்கிழமை நம் லங்கா4 வாசகர்களுடன் பகிர்வோம். காத்திருங்கள்... பொறுத்திருங்கள்.

ஓம் சக்தி!