திருமணத்தின் போது பார்க்கப்படும் பொருத்தங்களும் அதற்கான விளக்கங்களும்....

#ஆன்மீகம் #திருமணம் #பொருத்தம் #spiritual #Marriage #match #information
திருமணத்தின் போது பார்க்கப்படும் பொருத்தங்களும் அதற்கான விளக்கங்களும்....

ஒரு ஆண் மற்றும் பெண்ணுக்கு திருமணம் நடக்க வேண்டுமெனில் கீழே குறைந்தபட்ச பொருத்தம் இருந்தால் அவர்களின் வாழ்க்கை சிறப்பாக, செழிப்பாக, அன்னியோன்யமாக இருக்கும் என நம்பப்படுகின்றது.

பொருத்தங்களை ஜோதிடர் சரிபார்த்து, அந்த குறிப்பிட்ட பெண்ணிற்கும், ஆணுக்கும் திருமண பொருத்தம் உண்டு அல்லது இல்லை என ஜோதிடர்கள் கூறுவது வழக்கம்.

1.தினப் பொருத்தம் :

இந்த பொருத்தம் மணமக்களின் ஆரோக்கியம் மற்றும் ஆயுளை குறிப்பிடுவதால் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகின்றது

2. கணப் பொருத்தம் :

ஒருவரின் குணநலம் எத்தனை முக்கியம் என்பதை நீங்களே அறிவீர்கள். மனம் ஒத்துப்போகாவிட்டால் மணமுறிவு தானே. ஆகையால் இப்பொருத்தத்தினை இன்ன கணத்தவருக்கு இன்ன கணம் பொருந்தக்கூடியது என நம் முனிவர்கள் வகுத்துள்ளனர்.

3. மாகேந்திரப் பொருத்தம் :

செழிப்பை கூறும் பொருளாதார வளத்தை குறிக்கும் பொருத்தம் ஆகும்.

4. ஸ்திரீ தீர்க்கம் :

மணமகள் தீர்க்க சுமங்கலியாக வாழ பார்க்கப்படுவது ஸ்திரீ தீர்க்கம் பொருத்தம் முக்கியமானதாகப் பார்க்கப்படுகின்றது.

5. யோனிப் பொருத்தம் 

மணமக்களின் உடல் தேவையை அவர்கள் எந்த வகையில் பூர்த்தி செய்து கொள்வார்கள் என்பதற்கு முரண்பாடு ஏற்படாமல் இருக்க யோனி பொருத்தம் பார்க்கப்படுகின்றது.

6.இராசிப் பொருத்தம் :

இது தலைமுறை விருத்தி செய்வதற்காக பார்க்கப்படும் முக்கிய பொருத்தம் ஆகும்.

7.இராசி அதிபதி பொருத்தம் :

சந்ததி விருத்திக்காகவும், தம்பதிகள் இணக்கமாக வாழ வழி வகுக்க உதவும் பொருத்தம்.

8.வசியப் பொருத்தம் :

மணமக்களின் நேச வாழ்விற்காக பார்க்கப்படும் பொருத்தம்.

9.ரஜ்ஜிப்பொருத்தம் :

இந்த ரஜ்ஜுப் பொருத்தம் இல்லாமல் திருமணம் செய்தல் கூடாது. தீர்க்க சுமங்கலியாக வாழ இந்த பொருத்தம் அவசியமாக பார்க்கப்படுகின்றது.

10. வேதைப் பொருத்தம் :

துக்கத்தை நீக்கக்கூடிய பொருத்தம்.

11. நாடிப் பொருத்தம் :

இந்த பொருத்தம் இருந்தால் தான் நம் வம்சம் விருத்தியாகி, வாழையடி வாழையாக குடும்பம் தழைக்கும் என நம்பப்படுகின்றது.

12. விருட்சப் பொருத்தம் :

விருட்ச பொருத்தம் என்பது பால் மரத்தை பொருத்து பார்க்கப்படுகின்றது. திருமணம் செய்ய உள்ள தம்பதிகளில் ஆண், பெண் இருவரில் ஒருவருக்காவது பால் மரமாக இருந்தால் நல்லது.