ஸ்கொட்லாந்தில் ஒரு மாதத்திற்கு இலவச பீட்ஸா - இன்ப அதிர்ச்சி கொடுத்த உணவகம்

ஸ்கொட்லாந்து எடின்பர்க்கிலுள்ள உணவக உரிமையாளர் ஒரு மாதம் இலவசமாக பீட்ஸாக்கள் வழங்கப்போவதாக அறிவித்துள்ளார்.
அது தாம் மேற்கொள்ள விரும்பும் நல்லெண்ண நடவடிக்கை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வாழ்க்கைச் செலவினம் அதிகரிக்கும் சூழலில் மக்களுக்கு உதவ அவ்வாறு திட்டமிட்டதாக 50 வயது மார்க் வில்கின்சன் கூறினார்.
தமது ஊழியர்கள் கூடுதல் நேரம் வேலை செய்யவும் அது வழிவகுக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மக்களுக்கு உதவும் அதேவேளை, உணவு விநியோக்கிப்பாளர்கள், ஊழியர்கள் என அனைவரும் பயனடையலாம் என்பதால் இலவச பீட்ஸா திட்டம் மகிழ்ச்சியளிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலவச பீட்ஸா திட்டத்துக்கான செலவு 12,000 பவுண்ட் என்றும் அவர் குறிப்பிட்டார்.
2020 மார்ச் மாதம் COVID-19 நோய்ப்பரவலின் தொடக்கத்தில், திரு.வில்கின்சன் உணவு விநியோகச் சேவையைத் தொடங்கினார்.
உணவகத்துக்கு வரும் வாடிக்கையாளர் ஒவ்வொருவருக்கும் குறிப்பிட்ட நேரத்தில் இலவச பீட்ஸாக்கள் வழங்கப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதன்மூலம், ஒருவருக்கு ஒருவர் உதவும் நல்லெண்ணத்தை மற்றவர்களிடமும உருவாக்க முடியும் என்று அவர் நம்புவதாக செய்தி நிறுவனம் கூறியுள்ளது.



