வெளிநாட்டவர்கள் இனி வீடு போன்ற சொத்துக்களை வாங்க தடை விதித்த கனடா

#Canada #Tourist
Prasu
2 years ago
வெளிநாட்டவர்கள் இனி வீடு போன்ற சொத்துக்களை வாங்க தடை விதித்த கனடா

இந்தியர்கள் உள்ளிட்டோர் பணி நிமித்தம் காரணமாக அதிகம் விரும்பி செல்லும் வெளிநாடாக அமெரிக்கா இருக்கிறது. இதற்கு அடுத்தபடியாக கனடா நாடு இருக்கிறது. 

இங்கு புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கவும், 2025-ஆம் ஆண்டுக்குள் லட்சக்கணக்கான வெளிநாட்டவரை குடியமர்த்தவும் அரசு திட்டமிட்டுள்ளதால், கனடா செல்லும் வெளிநாட்டவரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 

இந்நிலையில் கனடா நாட்டில் நாட்டில் வீடு மற்றும் மனைகளின் விலை சமீப காலமாக உயர்ந்து வருவதோடு, குடியிருப்பு மற்றும் வணிக பயன்பாட்டுக்கான வாடகை கட்டணமும் அதிகரித்து வருகிறது.

இதனால் கனடா நாட்டு மக்கள் வீடு போன்ற சொத்துக்களை வாங்க முடியாமல் தவிப்பதோடு, வாடகை கொடுக்க முடியாமலும் கஷ்டப்படுகிறார்கள். 

இதன் காரணமாக தங்கள் நாட்டு குடிமக்களின் நலனை கருத்தில் கொண்டு கனடா நாட்டு அரசு ஒரு முக்கிய முடிவை எடுத்து ஒரு அதிரடி சட்டத்தை இயற்றியுள்ளது. 

அந்த சட்டத்தின்படி வெளிநாட்டு மக்கள் இனி கனடாவில் வீடு போன்ற சொத்துக்களை வாங்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியா உள்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தொழிலதிபர்கள் கனடாவில் சொத்துக்களை வாங்கி குவித்தனர். 

ஆனால் தற்போது இயற்றப்பட்ட புதிய சட்டத்தின் மூலம் கனடாவில் சொத்துக்களை வெளிநாட்டு மக்கள் வாங்க முடியாது நிலை ஏற்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!