பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் மீது  பாலியல் குற்றச்சாட்டு- கடும் அதிருப்தியில் ரிஷி சுனக்

#world_news #UnitedKingdom #Britain #Sexual Abuse #Parliament
Nila
2 years ago
பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் மீது  பாலியல் குற்றச்சாட்டு- கடும் அதிருப்தியில் ரிஷி சுனக்

பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் மீது  பாலியல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளது.

இது குறித்து அந்நாட்டு பிரதமர் ரிஷி சுனக் கடுமையான அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். பிரித்தானியாவில் அனைத்துக் கட்சி நாடாளுமன்றக் குழுக்களில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்களுக்கு பல சிறப்புரிமைகள் உள்ளன. 

குறிப்பிட்ட விடயங்களுக்காக இவர்கள் நாடாளுமன்றத்தில் கலந்துரையாடவும் அறிக்கைகளைத் தயாரிக்கவும் நிகழ்ச்சிகளை நடத்தவும் அனுமதி உண்டு.

இப்படியான130 குழுக்கள் பிரித்தானியாவில் உள்ளன. மேலும், வெளிநாட்டு அரசுகளோ தனியார் அமைப்புகளோ அளிக்கும் நிதியுதவியில், உண்மையறியும் குழுக்களில் வெளிநாட்டுப் பயணங்களையும் இவர்கள் மேற்கொள்ளலாம். 

சில ஆண்டுகளாக இந்தக் குழுக்களில் உள்ள பல உறுப்பினர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் வைக்கப் பட்டுள்ளன. 

இதுகுறித்து பெயர் குறிப்பிடாமல் சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சி உறுப்பினர்கள் மீது ஊடகச்செய்திகள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து பிரதமர் சுனக் அதிருப்தி தெரிவித்துள்ளதாகவும், உரிய தீர்வு கிடைக்குமென நம்புவதாகவும் அவரின் அலுவலகம் தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!