மக்கள் பெருக்கத்தை குறைக்க டோக்கியோவில் இருந்து வெளியேறும் குடும்பங்களுக்கு நிதியுதவி

Prasu
1 year ago
மக்கள் பெருக்கத்தை குறைக்க டோக்கியோவில் இருந்து வெளியேறும் குடும்பங்களுக்கு நிதியுதவி

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 3½ கோடி பேர் வசித்து வருகிறார்கள். இதனால் மற்ற நகரங்களில் மக்கள் தொகை பெருக்கம் அதிகமாக உள்ளது. 

நாட்டின் கிராம புறங்களில் மக்கள் தொகை குறைந்தபடி இருந்ததால் அதை தடுக்க அரசு நடவடிக்கை எடுத்தது. 

அதன்படி கடந்த 2019-ம் ஆண்டு ஒரு திட்டத்தை தொடங்கியது. அதில் தலைநகர் டோக்கியோவில் இருந்து கிராம புறங்களுக்கு இடம் பெயர்பவர்களுக்கு சலுகைகள் வழங்கப்படும் என்று அறிவித்தது. 

ஆனால் 2019-ம் ஆண்டு 71 பேரும், 2020-ம் ஆண்டு 290 பேரும் மட்டுமே இடம் பெயர்ந்தனர். கடந்த ஆண்டு இந்த திட்டத்தின் கீழ் 1184 குடும்பங்கள் பயனடைந்தனர். 

இந்த நிலையில் தலைநகர் டோக்கியோவில் இருந்து வெளியேறும் குடும்பங்களில் உள்ள ஒவ்வொரு குழந்தைகளுக்கும் தலா ஒரு மில்லியன் யான் பணம் (இந்திய மதிப்பில் ரூ.6.33 லட்சம்) வழங்கப்படும் என்று ஜப்பான் அரசு அறிவித்து உள்ளது. 

இந்த புதிய திட்டத்தின் கீழ் இரண்டு குழந்தைகள் கொண்ட ஒரு குடும்பம் டோக்கியோவில் இருந்து வெளியேறினால் 3 மில்லியன் யான் பணம் பெறலாம். மத்திய டோக்கியோ பகுதியில் இருந்து 5 ஆண்டுகளாக வசித்த குடும்பங்கள் நிதியுதவிக்கு விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!