2022ம் ஆண்டு 1.25 லட்சம் இந்திய மாணவர்களுக்கு விசா வழங்கி சாதனை படைத்த அமெரிக்கா

2022-ம் நிதி ஆண்டில் 1.25 லட்சம் இந்திய மாணவர்களுக்கு விசா வழங்கி அமெரிக்கா சாதனை படைத்துள்ளது என நெட் பிரைஸ் கூறியுள்ளார்.
அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் நெட் பிரைஸ் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் இந்திய சுற்றுலாவாசிகளுக்கு விசாக்களை அனுமதிப்பதில் காலதாமதம் ஏற்படுவது பற்றிய கேள்வி
இதற்கு பதிலளித்து அவர் பேசியதாவது:- இந்தியாவில் உள்ள எங்களுடைய தூதரகம் மற்றும் தூதரக அதிகாரிகள், 2022-ம் ஒற்றை நிதியாண்டில் மாணவர்களுக்கு விசா வழங்கியதில் இதுவரை இல்லாத வகையில் சாதனை படைத்து உள்ளது.
ஏறக்குறைய 1.25 இந்திய மாணவர்களுக்கு விசா அனுமதி வழங்கி இருக்கிறோம். சில விண்ணப்பதாரர்களின் கோரிக்கையான நீட்டிக்கப்பட்ட விசாக்களை பெறுவதில் காலதாமதம் ஏற்படுவது உண்மை தான். இருப்பினும், விசாக்களை பெறுவதற்கான நேர்காணலுக்கான காத்திருப்பு நேரத்தை குறைப்பதற்கான முயற்சியை எடுத்து வருகிறோம்.
தேச பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து பாதுகாப்பை மேற்கொள்வதுடன், நேர்மையான கோரிக்கைகளுடன் கூடிய அமெரிக்கர் அல்லாத நபர்களுக்கு பயண வசதிகளையும் நாங்கள் செய்து வருகிறோம்.



