பிரித்தானியாவில் போதுமான பராமரிப்பின்றி உயிரிழக்கும் நோயாளிகள்

பிரித்தானியாவில் நோயாளிகள் போதுமான பராமரிப்பின்றி உயிரிழந்து வருவதாக நாட்டின் மருத்துவ அமைப்புகள் கூறுகின்றன.
குளிர்காலத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள வேலைநிறுத்தங்களும் அதிகரித்து வரும் பராமரிப்புத் தேவையும் சுகாதாரத் துறைக்குச் சவாலாக உள்ளன.
இச்சூழலைச் சமாளிக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அரசாங்கத்தை மருத்துவ அமைப்புகள் கேட்டுக்கொள்கின்றன.
10 ஆண்டுகளுக்கும் மேலாகப் பொதுச் சுகாதாரச் சேவை நிதிக் கட்டுப்பாடுகளை எதிர்நோக்கியது.
அதன் பின் ஏற்பட்ட கொரோனா நோய்த்தொற்று நிலைமையை மேலும் மோசமாக்கியது.
கடந்த வாரம் அவசர முதலுதவி வாகனங்களில் ஏற்றிச்செல்லப்பட்ட நோயாளிகளில் 5இல் ஒருவர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட ஒரு மணி நேரத்துக்கு மேல் காத்திருந்தனர்.
ஆயிரக்கணக்கான நோயாளிகள், சிகிச்சை பெற 12 மணி நேரத்துக்கு மேல் காத்திருக்க நேரிட்டது.
நீண்ட காத்திருப்பு நேரங்களால் அவசர சிகிச்சைப் பிரிவில் வாரத்துக்கு 300 முதல் 500 நோயாளிகள் வரை உயிரிழக்கக்கூடும் என்று The Royal College of Emergency Medicine அமைப்பு கூறியது.



