பிள்ளையார் பற்றிய இன்றைய 5 தகவல்கள். பாகம் - 24

#ஆன்மீகம் #கடவுள் #பிள்ளையார் #இன்று #தகவல் #spiritual #God #Pillaiyar #today #information
பிள்ளையார் பற்றிய இன்றைய 5 தகவல்கள். பாகம் - 24
  1. முற்காலத்தில் இந்துக்களின் ஆண்டுக்கணக்கு ஆவணியிலே தொடங்கியது. அப்போது அவர்கள் விநாயக சதுர்த்தியை கொண்டாடி வருடத்தினை ஆரம்பித்து வைத்தனர்.
     
  2. விநாயக சதுர்த்தியன்று பெரும் ஊரவலங்கள் அளவிற்கு கொண்டு வந்தவர் கங்காதார திலகர் ஆவார்.
     
  3. விநாயக சதுர்த்தியன்று கரைக்கப்படும் பிள்ளையார் சிலையானது மண்ணில் உண்டாவது மண்ணிற்கே திரும்பும் எனும் தத்துவத்தைக் காட்டுகிறது.
     
  4. ஓளவையாரே “பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் தருவேன் எனக்கு நீ முத்தமிழ் தா” என உரிமையோடு கேட்கின்றார் என்றால் அவரின் எளிமை அப்படியானது.
     
  5. விநாயகரின் உடலை நோக்கினால் ஒரு கொம்பு ஆண் தன்மை, கொம்பில்லாத பகுதி பெண் தன்மை (பெண் யானைக்கு தந்தமிலை), யானைத் தலை அஃறிணை, தெய்வ சரீரம் உயர்திணை. இந்த மாதிரித் தேவராய், விலங்காய், ஆணாய், பெண்ணாய், உயர் திணையாய், அஃறிணையாய் எல்லாமுமாய் விளங்குபவர் விநாயகர்.