உலகில் முதன்முறையாக தேனீக்களுக்கான தடுப்பூசி!

தேனீக்களைக் குறிவைக்கும் உலகின் முதல் தடுப்பூசியைப் பயன்படுத்த அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் அளித்துள்ளது.
இதன் மூலம் தேனீக்களின் எண்ணிக்கையில் தொடர்ந்து வரும் சரிவை கட்டுப்படுத்தி தேனீக்களின் அழிவைக் குறைக்க முடியும்.
அமெரிக்காவில் பரவி வரும் பக்டீரியாவால், அந்நாட்டில் தேனீக்களின் எண்ணிக்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 2006 ஆம் ஆண்டு முதல், அமெரிக்காவில் தேனீ காலனிகள் ஆண்டுதோறும் குறைந்து வருவது தெரியவந்துள்ளது.
அதன்படி, தயாரிக்கப்பட்ட இந்தத் தடுப்பூசி தேனீக் கூட்டின் ராணி பகுதியில் செலுத்தப்பட உள்ளது. இது தேனீ இனத்தை பாதிக்கும் பாக்டீரியாக்களை அழிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மகரந்தச் சேர்க்கையாளர்களாக, தேனீக்கள் சுற்றுச்சூழல் அமைப்பை பராமரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் கூற்றுப்படி, தேனீக்கள், பறவைகள் மற்றும் வெளவால்கள் போன்ற மகரந்தச் சேர்க்கைகள் உலகின் பயிர் உற்பத்தியில் 3ல் 1க்கு நேரடியாக பங்களிக்கின்றன. தேன் பல்வேறு மருத்துவ சிகிச்சைகளுக்கும் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது..



