உக்ரைனுக்கு மேலும் 3.75 பில்லியன் ராணுவ உதவி வழங்க அமெரிக்கா தீர்மானித்துள்ளது - ஆன்டனி பிளிங்கன்

#America #Weapons #Ukraine
Prasu
1 year ago
உக்ரைனுக்கு மேலும் 3.75 பில்லியன் ராணுவ உதவி வழங்க அமெரிக்கா தீர்மானித்துள்ளது - ஆன்டனி பிளிங்கன்

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 10 மாதங்களைக் கடந்துள்ளது. இந்தப் போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். போரினால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆதரவளித்து வருகின்றன. 

உக்ரைனுக்கு தேவையான ஆயுத உதவியை வழங்குவதுடன் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் ரஷியா மீது பல்வேறு பொருளாதார தடைகளையும் விதித்துள்ளன. 

அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் ஆயுத உதவியால் இந்த போர் பல மாதங்களாக நீடித்து வருகிறது. இந்நிலையில், உக்ரைனுக்கு மேலும் 3.75 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான ராணுவ உதவிகளை வழங்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது என வெளியுறவுத்துறை மந்திரி ஆன்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார். 

இதில் பிராட்லி காலாட்படை சண்டை வாகனங்கள், சுயமாக இயக்கப்படும் ஹோவிட்சர்கள் ஆகியவை அடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!