பிரித்தானியாவில் ஊதிய உயர்வுக்கோரி நடத்தப்படும் போராட்டத்திற்கு இளம்நிலை மருத்துவர்கள் வாக்களிப்பு!

பிரித்தானியாவில் ஊதிய உயர்வுக்கோரி போராட்டம் நடத்துவது குறித்து ஆயிரக்கணக்கான இளம்நிலை மருத்துவர்கள் வாக்களிக்கவுள்ளனர்.
பிரிட்டிஸ் அசோசியேஷனில் உள்ள சுமார் 45 ஆயிரம் உறுப்பினர்கள், வாக்களிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த வாக்களிப்பின் முடிவுகள் வரும் பெப்ரவரி மாதத்தின் இறுதியில் வெளியிட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வாக்களிப்பு வரம்பு 50 வீதத்தை அடைந்தால், ஜுனியர் வைத்தியர்கள், மற்றும் எந்தவொரு வைத்தியரும் 72 மணி நேர முழு நேர வேலை நிறுத்தபோராட்டத்தை முன்னெடுப்பார்கள் என தெரிவிக்கப்படுகிறது.
இந்த காலப்பகுதியில் வைத்தியர்கள் எந்தவொரு அவசரகால சேவையையும் வழங்கமாட்டார்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. அதேநேரம் அவசர பாதுகாப்பு ஏற்பாடுகளை அறக்கட்டளைகள் செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் வேலை நிறுத்தப்போராட்டங்களை தவிர்ப்பதற்காக அரசாங்கம் தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஜேரமி ஹன்ட் சுகாதார செயலாளராக பதியேற்றப்பின் இரண்டாவது முறையாக இளநிலை மருத்துவர்கள் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.



