தாலிப் மீது அமெரிக்காவினால் தடை ஏற்படுத்தப்பட்டு அவர் கைது செய்யப்பட்ட பிறகும் வணிகத்தைத் தொடர்ந்ததாக குற்றம்

அல்-கொய்தா அமைப்புக்கு ஆதரவாக செயற்பட்டதாக கூறப்படும் அஹமட் லுக்மான் தாலிப்பின் வருமானத்தை ஈட்டிக்கொடுப்பதில் முக்கிய பங்கு வகித்த இலங்கையின் இரத்தினக் கற்கள் நிறுவனம், தாலிப் மீது அமெரிக்காவினால் தடை ஏற்படுத்தப்பட்டு அவர் கைது செய்யப்பட்ட பிறகும் வணிகத்தைத் தொடர்ந்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஆராச்சி மற்றும்; தரவுப் பகுப்பாய்வு நிறுவனம் ஒன்றை கோடிட்டு இந்த செய்தியை செய்தித்தளம் ஒன்று வெளியிட்டுள்ளது.
தாலிப்புடன் அவருக்குச் சொந்தமான ஒரு இரத்தினக் கல் வணிகம், 2020 அக்டோபரி;ல் அமெரிக்க திறைசேரியால் தடைசெய்யப்பட்டது.
அதைத் தொடர்ந்து அவர் 2021 இல் அவுஸ்திரேலிய காவல்துறையால் கைது செய்யப்பட்டார்,
இந்தநிலையில் இலங்கையை தளமாகக் கொண்ட ஒரு இரத்தினக்கல் வர்த்தக நிறுவனம், அல்-கொய்தாவுக்கு நிதியளிக்கும் தாலிப்புக்கு வருவாயை ஈட்டிக்கொடுப்பதில்; முக்கிய பங்குதாரராக இருந்தது என்று கரோன் என்ற ஆராச்சி மற்றும் தரவு பகுப்பாய்வு நிறுவனம் கூறியுள்ளது.
இந்த வர்த்தக நிறுவனம் இலங்கையின் தென்மேற்கு கரையோர பிரதேசத்தில் உள்ள முகவரியில் வசிக்கும், கடந்த நவம்பர் 9ம் திகதி, அமெரிக்காவினால் தடைசெய்யப்பட்ட, முகமது ஹாரிஸ் நிஸார் என்பவரின் முகவரியை கொண்டுள்ளது.
இலங்கையை தளமாகக் கொண்ட இந்த இரத்தினக் கல் வர்த்தக நிறுவனம் 100,000 அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான மதிப்புள்ள விலைமதிப்பற்ற இரத்தினக் கற்களை அவுஸ்திரேலியாவில் உள்ள தாலிப்பின் நிறுவனத்துக்கு அனுப்பியுள்ளது.
அத்துடன், இலங்கையில் அவுஸ்திரேலிய தாலிப் மற்றும் இலங்கையின் நிஸாரின் ஆகியோரின் வணிகக் கொடுக்கல் வாங்கல்கள் 2018 முதல் வருடத்திற்கு கிட்டத்தட்ட 200,000 டொலர்களை லாபமாக ஈட்டியுள்ளன,
இந்தநிலையில் 2021இல் அமெரிக்க அரசாங்கத்தால் தடைசெய்யப்பட்ட பின்னரும், இந்த இரத்தினக்கல் நிறுவனம்,வாடிக்கையாளர்க்ளுக்கு பொருட்களை அனுப்பி வந்துள்ளது.
தாலிபின் அல்-கொய்தா வலையமைப்பின் சர்வதேச பாதை தென் அமெரிக்கா வரை நீண்டுள்ளது.
அல்-கொய்தாவின் நிதியாளர் அஹ்மத் தாலிப் பிரேசிலை தளமாகக் கொண்ட நிறுவனம் ஒன்றின் நிர்வாகப் பங்காளியாகவும் செயற்பட்டார் என்று கண்டறியப்பட்டுள்ளது.



