இந்தோனேசியாவில் கடலுக்கடியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்! இலங்கைக்கு ஆபத்தா?
#world_news
#Indonesia
#Earthquake
Mayoorikka
2 years ago

இந்தோனேசியாவின் டானிமர் மாகாணத்தில் நள்ளிரவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது என ஐரோப்பிய புவியியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
கடலுக்கு அடியில் 97 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.7 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் கட்டடங்கள் குலுங்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டாலும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை.
இதேவேளை இலங்கைக்கு எந்த அச்சுறுத்தலும் கிடையாது என தேசிய சுனாமி முன் எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.
இலங்கைக்கு அச்சுறுத்தல் இல்லை எனவும் அந்த மையம் தெரிவித்துள்ளது. இலங்கையின் கரையோரப் பகுதிகள் பாதுகாப்பானவை என அறிவிக்கப்பட்டுள்ளது.



