எண்ணம் நிறைவேறும் மூன்று ராசிக்காரர்கள்,அதிஷ்டம் கிட்டும் ராசிக்காரர்களுக்கான இன்றைய ராசிபலன்

#Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
1 year ago
எண்ணம் நிறைவேறும் மூன்று ராசிக்காரர்கள்,அதிஷ்டம் கிட்டும் ராசிக்காரர்களுக்கான இன்றைய ராசிபலன்

மேஷம்
அசுவினி: வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். குடும்பத்தினர் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள்.
பரணி: மனதில் நினைத்ததை செயல்படுத்தி மகிழ்ச்சி காண்பீர்கள். உங்கள் எண்ணம் நிறைவேறும்.
கார்த்திகை 1: சொத்து விவகாரம் ஒரு முடிவிற்கு வரும். குடும்ப நலன் மேம்படும்.

ரிஷபம்
கார்த்திகை 2, 3, 4: நீண்ட நாட்களாக தள்ளி வைத்து வந்த வேலையில் இன்று கவனம் செலுத்துவீர்கள்.
ரோகிணி: அரசு வழியிலான முயற்சி நிறைவேறும். செயல்களில் லாபம் உண்டாகும்.
மிருகசீரிடம் 1, 2: பகைவர்களின் தொல்லை விலகும். தாய்வழி உறவுகளால் ஆதாயம் உண்டு.

மிதுனம்
மிருகசீரிடம் 3,4: நேற்று மேற்கொண்ட ஒரு முயற்சி இன்று நிறைவேறும். ஆதாயம் அதிகரிக்கும்.
திருவாதிரை: எதிர்பார்த்த செய்தி ஒன்று வந்து சேரும். சகோதரர்கள் வழியில் நன்மை உண்டு.
புனர்பூசம் 1, 2, 3: தைரியமாக செயல்படுவீர்கள். விஐபிகள் ஆதரவுடன் உங்கள் முயற்சி ஒன்று நிறைவேறும்.

கடகம்
புனர்பூசம் 4: குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகளுக்கு பேசி தீர்வு காண்பீர்கள். நன்மை அதிகரிக்கும்.
பூசம்: தம்பதிகளுக்குள் நெருக்கம் அதிகரிக்கும். ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு செயல்படுவீர்கள்.
ஆயில்யம்: புதிய நபர்கள் அறிமுகம் ஆவார்கள். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.

சிம்மம்
மகம்: தொழில் ரகசியங்களை யாரிடமும் தெரிவிக்க வேண்டாம். எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய நாள்.
பூரம்: ஒன்றுக்கும் மேற்பட்ட வேலைகளில் ஈடுபடுவீர்கள். மனதில் குழப்பம் தோன்றும்.
உத்திரம் 1: உங்கள் செயல்கள் இழுபறியாகும். தேவையற்ற சிந்தனைகள் மேலோங்கும்

கன்னி
உத்திரம் 2, 3, 4: குடும்பத்திற்காக செலவுகள் அதிகரிக்கும். உங்களது எதிர்பார்ப்பு இழுபறியாகும்.
அஸ்தம்: யோசித்து செயல்பட்டாலும் திடீர் செலவுகள் ஏற்பட்டு சங்கடப்படுவீர்கள். நிதானம் காப்பது அவசியம்.
சித்திரை 1, 2: அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக செலவுகள் செய்வீர்கள்.

துலாம்
சித்திரை 3, 4: நீண்ட நாள் எண்ணம் ஒன்று நிறைவேறும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
சுவாதி: வராமல் இருந்த ஒரு தொகை இன்று உங்கள் கைக்கு வந்து சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
விசாகம் 1, 2, 3: உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். பெற்றோரின் ஆதரவு உண்டாகும். நன்மையான நாள்.

விருச்சிகம்: 
விசாகம் 4: வியாபாரத்தை அபிவிருத்தி செய்ய திட்டமிடுவீர்கள். உங்கள் முயற்சி நிறைவேறும்.
அனுஷம்: நினைத்ததை சாதிப்பீர்கள். எதிர்காலம் குறித்த எண்ணம் மேலோங்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்
கேட்டை: குடும்பத்தினர் விருப்பத்தைக் கேட்டு செயல்படுவீர்கள். தடைபட்டிருந்த வருவாய் வந்து சேரும்.

தனுசு
மூலம்: குடும்பத்திற்குள் உண்டான குழப்பம் விலகும். தந்தையின் ஆலோசனை நன்மை தரும்
பூராடம்: வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னைகளை சரி செய்வீர்கள். வருமானம் அதிகரிக்கும். நிதிநிலை உயரும்.
உத்திராடம் 1: புதிய சொத்து வாங்கும் முயற்சி நிறைவேறும். உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும்.

மகரம்
உத்திராடம் 2, 3, 4: செயலில் கவனம் தேவை. அமைதி காப்பது நன்மையாகும். முயற்சிகள் இழுபறியாகும்.
திருவோணம்: சந்திராஷ்டமம் என்பதால் மற்றவர் பிரச்னைகளில் தலையிட வேண்டாம்.
அவிட்டம் 1, 2: வேலைகளில் குழப்பம் உண்டாகும். வீண் அலைச்சல் ஏற்பட்டு சோர்வடைவீர்கள்.

கும்பம்
அவிட்டம் 3, 4: உங்கள் திறமை வெளிப்படும். அக்கம் பக்கத்தினர் பாராட்டுவார்கள். வருமானம் கூடும்.
சதயம்: உங்களைத் தேடி முக்கிய பொறுப்புகள் வரும். உங்கள் பலத்தை நீங்கள் அறிவீர்கள்.
பூரட்டாதி 1, 2, 3: தம்பதிகளுக்குள் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமண வயதினருக்கு வரன் தேடி வரும்.

மீனம்:

பூரட்டாதி 4: எதிர்பார்த்த உதவிகள் கிடைத்து மகிழ்வீர்கள். குடும்பநிலை உயரும். எதிர்ப்பு விலகும்.
உத்திரட்டாதி: விலகிச் சென்ற உறவினர்கள் உங்களைத் தேடி வருவார்கள். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்கள் தீரும்.
ரேவதி: சொத்து சம்பந்தமான பிரச்னையில் சுமூகமான தீர்வு காண்பீர்கள். உங்கள் முயற்சி ஆதாயமாகும்.