தியேட்டரில் இருந்து கோபமாக கிளம்பிய விஜய்?

#Vijay
Prabha Praneetha
3 years ago
தியேட்டரில் இருந்து கோபமாக கிளம்பிய விஜய்?

மனைவி சங்கீதாவுடன் சேர்ந்து வாரிசு படம் பார்த்த விஜய் தியேட்டரில் இருந்து கோபமாக சென்றார் என்று பேசப்படுகிறது.

வம்சி பைடிபல்லி இயக்கத்தில் தளபதி விஜய், ரஷ்மிகா மந்தனா, சரத்குமார், ஜெயசுதா, ஷாம், ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் நடித்திருக்கும் வாரிசு படம் இன்று ரிலீஸாகியிருக்கிறது.

பொங்கல் பண்டிகை ஸ்பெஷலாக வெளியாகியிருக்கும் வாரிசு படத்தை தன் தோளில் தாங்கியிருக்கிறார் விஜய் என விமர்சனம் எழுந்துள்ளது. இந்நிலையில் விஜய் பற்றி ஒரு தகவல் வெளியாகி தீயாக பரவியிருக்கிறது.

சென்னையில் இருக்கும் தியேட்டர் ஒன்றில் விஜய் மற்றும் அவரின் காதல் மனைவியான சங்கீதாவுக்காக வாரிசு படத்தின் ஸ்பெஷல் ஸ்கிரீனிங்கிற்கு நேற்று இரவு ஏற்பாடு செய்யப்பட்டதாம். இந்த நேரம் தான் படம் துவங்கும் என்று விஜய்யிடம் முன்கூட்டியே தெரிவித்தார்களாம். அவரும் சரியான நேரத்திற்கு மனைவியுடம் தியேட்டருக்கு வந்தாராம். ஆனால் அங்கு தான் டுவிஸ்டே.

படத்தை திரையிடுவதில் ஒரு சின்ன சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. சார், உடனே படத்தை போட முடியாது. கொஞ்சம் வெயிட் பண்ணுங்க என்று விஜய்யிடம் கூறினார்களாம். கடைசியில் இரண்டு மணிநேரம் கழித்து தான் படத்தை திரையிட்டார்களாம். வந்த இடத்தில் பிரச்சனை வேண்டாம் என்று விஜய்யும் 2 மணிநேரம் பொறுமையாக காத்திருந்து படத்தை பார்த்தாராம்.

2 மணிநேர தாமதத்தால் படம் பார்த்த பிறகு கோபமாக தியேட்டரில் இருந்து கிளம்பிச் சென்றார் விஜய் என தகவல் வெளியாகியுள்ளது. ஆசை, ஆசையாக படம் பார்க்க வந்த மனிதரை இப்படி கோபப்படுத்தி அனுப்பி வைத்திருக்கிறார்களே என்கிறார்கள் ரசிகர்கள்.

எங்க விஜய்ணாவுக்கு கோபமே வராது. ஆனால் அப்படிப்பட்டவரையே கோபப்பட வைத்துவிட்டார்களே என ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4