சின்னசீரகத்தின் நீரினை தினமும் பருகுவதால் உடலில் உண்டாகும் ஆற்றல்கள்...

#ஆரோக்கியம் #சீரகம் #தண்ணீர் #குடித்தல் #பயன்பாடு #Health #herbs #water #drink #Benefits
சின்னசீரகத்தின் நீரினை தினமும் பருகுவதால் உடலில் உண்டாகும் ஆற்றல்கள்...

சமையலுக்கு நறுமணத்திற்கும் சுவைக்கும் பயன்படும் சின்னசீரகத்தினை நாம் சமையலறையில் தாராளமாக காணலாம். அதன் ஆரோக்கியம் பற்றி தெரியுமோ உங்களுக்கு.

ஆம். இன்றைய ஆரோக்கியத்தில் நாம் சின்னசீரகத்தின் நீரினை தினமும் பருகுவதால் உண்டாகும் ஆற்றல்கள் குறித்து பார்க்கலாம்.

உணவு செரிமானம்

காலையில் ஒரு டம்ளர் சீரக நீர் அருந்துவதால் கார்போஹைட்ரேட், குளுக்கோஸ் மற்றும் கொழுப்புகளை உடைக்க உதவும் நொதியங்கள் உற்பத்தியை சீரகம் தூண்டுகிறது.

இது உடலின் அஜீரண பிரச்சனைகளை தடுத்து உணவு செரிமானத்திற்கு உதவுவதோடு நச்சுகளை அகற்ற உதவும்.

சீரக நீரில் ஆக்சிஜனேற்ற சக்தி அதிகமாக உள்ளதால் உள்ளுறுப்புகள் ஆரோக்கியமாக செயலாற்றுகிறது.

நோய் எதிர்ப்பு சக்தி

சீரகத்தில் இரும்பு சத்து அதிகமாக உள்ளதன் காரணமாக நோயெதிர்ப்பு மண்டலம் சீராக பணியாற்றுகிறது.

1 டம்ளர் சீரக நீரில் ஒரு நாளுக்கு பரிந்துரைக்க பட்ட இரும்பு சத்து உட்கொள்ளலில் 7% பூர்த்தியாகிறது.


சுவாச மண்டலம்

1 டம்ளர் சீரக நீர் குடிப்பது, மார்பில் சளி நீர்த்துப்போக உதவுகிறது. அதன் நோயெதிர்க்கும் பண்புகள் சளி மற்றும் இருமல் ஏற்படுத்தும் நுண்ணுயிரிகளை கொல்ல உதவும். இதன் மூலம் சுவாசமண்டலம் சீராக செயல்பட உதவுகிறது.

துாக்கமின்மைக்கு

சீரக நீர் அருந்துவதால் தூக்கமின்மை என்னும் நோயை நம்மால் அதிக அளவில் குணப்படுத்த முடியும்.

சீரகம் மூளையின் சக்தியை அதிகரிக்க உதவுவதோடு தூக்கத்தின் சிறந்த தரத்தையும் அதிகரிக்கும்.

சருமம்

சீரகத்தில் நார்சத்து அதிகமாக இருப்பதால் உடலின் நச்சுத்தன்மையை அகற்றி உடலை மென்மையாக மாற்ற உதவுகிறது. இதன் மூலம் சருமம் இயற்கையாக பளபளப்புடன் இருக்கிறது. முகப்பரு சிகிச்சைக்கும் இது சிறந்த வழியாகும்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!