ஆரோக்கியமாக வாழ இரண்டாம் எலிசபெத் பின்பற்றிய டயட் இரகசியங்கள்

#world_news #UnitedKingdom #Britain #Queen_Elizabeth #Healthy
Nila
1 year ago
ஆரோக்கியமாக வாழ  இரண்டாம் எலிசபெத் பின்பற்றிய டயட் இரகசியங்கள்

பிரித்தானியாவில் நீண்ட காலம் ஆட்சி செய்த ராணியான இரண்டாம் எலிசபெத் மகாராணி, 70 ஆண்டுகால ஆட்சிக்குப் பிறகு தனது 96வது வயதில்  காலமானார்.

ராணி இரண்டாம் எலிசபெத் அவர்கள் 96 வயது வரை ஆரோக்கியமான வாழ்வை வாழ்ந்திருக்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த ஆரோக்கியமான வாழ்வில் மிக முக்கிய பங்குவகிப்பது அவரின் உணவு முறை தான்.

இந்நிலையில் ராணி இரண்டாம் எலிசபெத் பின்பற்றிய டயட் சீக்ரெட்ஸ் பற்றி இந்த தொகுப்பில் காண்போம்.

பாரம்பரியமான பிரெஞ்ச் மற்றும் பிரிட்டிஷ் உணவுகளையே ராணி இரண்டாம் எலிசபெத் அதிகம் விரும்புவார்கள்.

அரண்மனையில் சமைக்கப்படும் உணவுகள் அனைத்தும் அரண்மனையின் தோட்டங்களில் விளையும் ஃபிரஷ்ஷான பொருள்களை கொண்டே சமைக்கப்படுகிறது.

அவர் விரும்பி உண்ணும் சால்மன் மீன் கூட இதற்கெனவே தனியாக ஆற்றில் வளர்க்கப்படுகிறதாம்.

ஆன்டி – ஆக்சிடண்ட்டுகள்ஆன்டி ஆக்சிடண்ட்டுகள் நிறைந்த உணவுகளை அதிகமாக தேர்வு செய்திருக்கிறார் ராணி எலிசபெத்.

ராணி எலிசபெத்தின் காலை உணவு
காலை உணவில் பெரும்பாலும் யோகர்ட், செரல் (அ) மல்டிகிரெய்ன் டோஸ்ட் இருக்கும்.அதற்கு முன் தூங்கி எழுந்ததும் ராணிக்கு எர்ல் கிரே டீயுடன் சில பிஸ்கட்டுகள் இருக்க வேண்டும்.

​ராணியின் மதிய உணவு
கிரில்டு மீன் மற்றும் ஸ்பின்னாச் அல்லது க்ரில்டு சிக்கன் ஆகியவை தான் அவருடைய பெரும்பாலான நாட்களில் இருக்கும் மதிய உணவு.

எலிசபெத் ராணியின் இரவு உணவு
விஸ்கி சாஸ் சேர்த்து செய்யப்பட்ட மஸ்ரூம்.

அதை சாப்பிட்டு முடித்ததும் இறுதியாக டெசர்ட்டில் சாக்லெட் கேக் அல்லது ஒரு கோப்பை ஃபிரஷ்ஷான பழங்கள் இருக்க வேண்டும்.

தேநீர் நேரங்களில் சாப்பிடுவது
தேநீர் குடிப்பது ராணி இரண்டாம் எலிசபெத்துக்கு மிகப் பிடித்த ஒன்று. இதிலும் இயர்ல் கிரே டீ தான் அவருடைய ஃபேவரைட்.

விரும்பி சாப்பிடாத சில உணவுகள்
வேகவைத்த முட்டை, உருளைக்கிழங்கு, வெங்காயம் மற்றும் பூண்டு, ஒயிட் பிரட், வாழைப்பழம், ஆகியவற்றை பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் சாப்பிட்டதே இல்லையாம்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!