மேற்கத்திய நாடுகள் ஆயுத விநியோகத்தை அதிகரித்தால் போரை வெல்ல முடியும் - உக்ரைன் ஜனாதிபதியின் ஆலோசகர்

Prasu
1 year ago
மேற்கத்திய நாடுகள் ஆயுத விநியோகத்தை அதிகரித்தால் போரை வெல்ல முடியும் - உக்ரைன் ஜனாதிபதியின் ஆலோசகர்

உக்ரைன் நாட்டின் மீதான ரஷியாவின் போர் ஓர் ஆண்டை நெருங்கி உள்ளது. ஆனாலும் போர் முடிவுக்கு வருவதற்கான சாத்தியக்கூறுகள் எதுவும் தென்படவில்லை. 

அமைதிப் பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் இல்லாத நிலையில், இருதரப்பும் நாளுக்குநாள் தாக்குதல்களை தீவிரப்படுத்தி வருகின்றன. 

ரஷியாவின் தாக்குதலை எதிர்கொண்டு உக்ரைன் பதில் தாக்குதல் நடத்துவதற்கு அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் முக்கிய பங்காற்றி வருகின்றன. 

உக்ரைனுக்கு அமெரிக்கா பல பில்லியன் டாலர் மதிப்புள்ள ராணுவ உதவிகளை வழங்கி வருகிறது. மேற்கததிய நாடுகள் தொடர்ந்து ஆயுத உதவிகளை வழங்கி வருகிறது. 

இந்நிலையில், மேற்கத்திய நாடுகள் ஆயுத விநியோகத்தை அதிகரித்தால், குறிப்பாக நீண்ட தூர ஏவுகணை அமைப்புகளை அதிகமாக வழங்கினால், 

இந்த ஆண்டு போரில் வெற்றிபெற முடியும் என உக்ரைன் அதிபரின் ஆலோசகர் மைக்கேலோ பொடோலியாக் ஏ.எஃப்.பி. செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார். 

அவர் மேலும் கூறியதாவது:- 100 கிலோ மீட்டருக்கும் அதிகமான இலக்கை தாக்கும் சக்தி கொண்ட ஏவுகணைகளால் மட்டுமே, ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்றும் நடவடிக்கையை துரிதப்படுத்த முடியும், 

இந்த சூழ்நிலையானது இலையுதிர்காலத்தில் போரை முடிவுக்கு கொண்டுவரும்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!