விநாயகருக்கு துாமகேது என்ற பெயர் வரக்காரணம் தெரியுமா?

#பிள்ளையார் #spiritual #God #Pillaiyar #today #information #விநாயகர் #கணபதி #ஐங்கரன் #ஏகதந்தன்
விநாயகருக்கு துாமகேது என்ற பெயர் வரக்காரணம் தெரியுமா?
  • புகை வடிவில் தோன்றிய அரக்கனை கொன்றதால் விநாயகருக்கு தூமகேது என்ற பெயர் ஏற்பட்டது.
     
  • கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கோயிலில் அருளும் விநாயகர் ஆவணி முதல் தை மாதம் வரை வெள்ளை நிறத்துடனும், மாசி முதல் ஆடி வரை கறுப்பு நிற மேனியராகவும் காட்சி தருவார். இவ்வாறு  நிறம் மாறுவதால் இவரை, பச்சோந்தி விநாயகர் என்ற பெயரில் வழிபடுகின்றனர்
     
  • சென்னை- மீஞ்சூருக்கு அருகில் உள்ளது செட்டிப் பாளையம். இங்குள்ள விநாயகர் கோயிலில், வலப்புறம் சாய்ந்த நிலையில் பிள்ளையார் வீற்றிருக்கார். இவரை, வலஞ்சை விநாயகர் என்கின்றனர்..
     
  • நவநீத கிருஷ்ணரைப் போன்று அழகிய குழந்தை வடிவில் உள்ள விநாயகர், வேலூர் கோட்டையில் சிற்பக் கலை நிறைந்த கல்யாண மண்டபத்தில் பக்தர்களுக்கு அருள்புரிகிறார்.
     
  • அரியலூர்- ஜெயங்கொண்டத்தில் இருந்து சுமார் 10 கி.மீ. தூரத்தில் உள்ள வைரவனீஸ்வரர் ஆலயத்தில், அர்ஜுனனுக்கு பாசுபத அஸ்திரப்பயிற்சி தந்த வில்லேந்திய விநாயகரை நாம் கண்டு வணங்கலாம்.
     
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!