சீனாவின் 73 ஆண்டுகால சாதனையை முறியடிக்கும் இந்தியா: ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்ட அறிக்கை

#China #children #India #people
Mayoorikka
1 year ago
சீனாவின் 73 ஆண்டுகால சாதனையை முறியடிக்கும் இந்தியா:  ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்ட அறிக்கை

உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடு என்ற சீனாவின் சாதனையை முறியடிக்க இந்தியா தயாராகி வருகிறது. 

இன்னும் 03 மாதங்களில் இந்தியா சீனாவை பின்னுக்கு தள்ளி உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக முன்னேறும் என ஐக்கிய நாடுகள் சபை கணித்துள்ளது.

அதன்படி, ஏப்ரல் 14-ம் திகதி  இந்தியா உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக மாறும் என்று ஐக்கிய நாடுகள் சபை கணித்துள்ளது.

இந்தியாவின் மொத்த மக்கள் தொகை 1.41 பில்லியன். சீனாவின் மக்கள் தொகை 1.45 பில்லியன். ஆனால் இந்தியாவின் மக்கள் தொகை ஏப்ரல் 15-ம் திகதி  அதைத் தாண்டிவிடும் என்று ஐக்கிய நாடுகள் சபை கணித்துள்ளது.

சீனாவுடன் ஒப்பிடுகையில், இந்தியாவில் அதிக பிறப்பு விகிதம் மற்றும் இளைஞர்கள் உள்ளனர். அதனால்தான் சீனாவை இந்தியா பின்னுக்குத் தள்ள முடிந்தது என்கிறார்கள் விமர்சகர்கள்.

சீனா 1950 முதல் உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இருந்து வருகிறது. இதன்படி, சீனாவின் 73 ஆண்டுகால சாதனையை இந்தியா முறியடிக்கும்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!