நீண்ட தூர பயணிக்கும் விமான பயணிகளுக்கு உலக சுகாதார அமைப்பு விடுத்துள்ள அறிவிப்பு

#WHO #Corona Virus #Covid 19
Prasu
1 year ago
நீண்ட தூர பயணிக்கும் விமான பயணிகளுக்கு  உலக சுகாதார அமைப்பு விடுத்துள்ள அறிவிப்பு

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா பெருந்தொற்றானது பல வகைகளாக உருமாறி பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. சீனா, ஜப்பான், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் தொற்று எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது.

அமெரிக்காவில், கடந்த 7-ந்தேதி வரையிலான அறிக்கையின்படி, 27.6 சதவீதம் மக்கள் கொரோனாவின் எக்ஸ்.பி.பி.1.5 என்ற உருமாறிய அதிதீவிர பரவல் தன்மை கொண்ட ஒமைக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என அந்நாட்டு சுகாதார அதிகாரிகள் அச்சம் தெரிவித்து உள்ளனர்.

அமெரிக்காவில் கொரோனாவின் இந்த ஒமைக்ரான் வைரசின் துணை வகை தொற்றானது சமீப நாட்களாக விரைவாக பரவி வருகிறது. எனினும், இந்த வகை வைரசானது, சர்வதேச அளவில் தொற்றை ஏற்படுத்தி புதிய அலையை ஏற்படுத்த கூடிய சாத்திய கூறுகள் பற்றி தெளிவாக தெரியவில்லை.

இந்த சூழலில், கொரோனா பரவல் அதிகமுள்ள பகுதிகளில் இருந்து வர கூடிய எந்தவொரு பயணியும் முக கவசம் அணிந்து வரவேண்டும் என்று பரிந்துரைக்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பு மற்றும் ஐரோப்பிய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!