கொரோனா தடுப்பூசிகளை நாஜி கால இனப்படுகொலையுடன் ஒப்பிட்ட பிரித்தானிய எம்பி பணி நீக்கம்

#UnitedKingdom #Minister #Covid 19 #Covid Vaccine
Prasu
1 year ago
கொரோனா தடுப்பூசிகளை நாஜி கால இனப்படுகொலையுடன் ஒப்பிட்ட பிரித்தானிய எம்பி பணி நீக்கம்

கொரோனா தடுப்பூசிகளை இனப்படுகொலையுடன் ஒப்பிட்ட பிரிட்டன் கன்சர்வேடிவ் எம்பி ஆண்ட்ரூ பிரிட்ஜன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

2-ம் உலகப் போரின் போது லட்சக்கணக்கான யூதர்கள் நாஜி ஜெர்மனியால் கொல்லப்பட்டதற்குப் பிறகு, கொரோனா தடுப்பூசிதான் "மனிதகுலத்திற்கு எதிரான மிகப்பெரிய குற்றம்" என்று வடமேற்கு லெய்செஸ்டர்ஷயர் பாராளுமன்ற உறுப்பினர் ஆண்ட்ரூ பிரிட்ஜென் குற்றம் சாட்டினார்.

இந்த நிலையில் கொரோனா தடுப்பூசிகளை இனப்படுகொலையுடன் ஒப்பிட்டதற்காக ஆளும் கன்சர்வேடிவ் கட்சியைச் சேர்ந்த பிரிட்ஜன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். பிரிட்ஜனின் கருத்து "முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது" என்று பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் கண்டனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!