வாழ்வில் திடீர் திருப்பங்களை சந்திக்க போகும் மூன்று ராசிக்காரர்கள் , அதிலும் மிதுன ராசிக்காரர்களுக்கான இன்றைய ராசிபலன்

#Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan #இன்றைய_ராசிபலன் #ராசிபலன்
Prasu
1 year ago
வாழ்வில் திடீர் திருப்பங்களை சந்திக்க போகும் மூன்று ராசிக்காரர்கள் , அதிலும் மிதுன ராசிக்காரர்களுக்கான இன்றைய ராசிபலன்

மேஷம்
அசுவினி: உறவினர்கள் ஆதரவால் உங்கள் சங்கடம் தீரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
பரணி: உங்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். எதிரிகளால் உண்டான நெருக்கடிகள் நீங்கும்.
கார்த்திகை 1: வியாபாரத்தில் ஏற்பட்ட சங்கடங்கள் தீரும். செயல்களில் உங்களுக்கு சாதகமான நிலை உண்டாகும்.

ரிஷபம்
கார்த்திகை 2, 3, 4: எதிர்காலத் திட்டம் ஒன்று நிறைவேறும். உறவினர்கள் ஆதரவு அதிகரிக்கும். நன்மையான நாள்.
ரோகிணி: உறவினர்கள் ஆதரவுடன் உங்கள் எண்ணம் ஒன்று பூர்த்தியாகும். மகிழ்ச்சி அதிகரிக்கும்.
மிருகசீரிடம் 1, 2: புதிய முயற்சி ஒன்றில் ஈடுபட்டு ஆதாயம் காண்பீர்கள். சொத்து விவகாரம் பேசி தீர்ப்பீர்கள்.

மிதுனம்
மிருகசீரிடம் 3,4: நீங்கள் எதிர்பார்த்த வருமானம் வந்து சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
திருவாதிரை: நண்பர்கள் வழியே ஆதாயம் உண்டாகும். உங்கள் எண்ணம் ஒன்று நிறைவேறும்.
புனர்பூசம் 1, 2, 3: குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகளை சரி செய்வீர்கள். உறவினர்களால் நன்மை உண்டாகும்.

கடகம்
புனர்பூசம் 4: பழைய பிரச்னை ஒன்று முடிவிற்கு வரும். உறவினரால் உதவி உண்டாகும்.
பூசம்: குடும்பத்தினர் ஆதரவுடன் ஒரு எண்ணத்தை நிறைவேற்றிக் கொள்வீர்கள். செயல் வெற்றியாகும்.
ஆயில்யம்: துணிச்சலுடன் செயல்பட்டு முயற்சி ஒன்றில் லாபம் காண்பீர்கள். நன்மையான நாள்.

சிம்மம்
மகம்: குடும்பத்தில் இருந்த சங்கடங்கள் விலகும். பொருளாதார நிலை உயரும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள்.
பூரம்: மனதில் ஏற்பட்ட குழப்பம் விலகும். வர வேண்டிய பணம் வசூலாகும். நிதிநிலை உயரும்.
உத்திரம் 1: நீங்கள் நினைத்ததை நிறைவேற்றிக் கொள்வீர்கள். புதிய பாதை தெரியும் நாள்.

கன்னி
உத்திரம் 2, 3, 4: சிந்திக்காமல் எந்தவொரு செயலிலும் ஈடுபட வேண்டாம். நெருக்கடியான நாள்.
அஸ்தம்: மற்றவரை நம்பி உங்கள் செயல்களை ஒப்படைக்க வேண்டாம். அதனால் சங்கடங்கள் உண்டாகும்.
சித்திரை 1, 2: மற்றவரை அனுசரித்துச் செல்வதின் மூலம் உங்கள் எண்ணம் ஒன்று நிறைவேறும்.

துலாம்
சித்திரை 3, 4: திட்டமிட்ட செயல்கள் இன்று இழுபறியாகும். பயணத்தில் கவனம் தேவை.
சுவாதி: பிறரிடம் விவாதம் செய்ய வேண்டாம். அதனால் சங்கடம் ஏற்பட வாய்ப்புண்டு. பொறுமை அவசியம்.
விசாகம் 1, 2, 3: நண்பர்களுக்குள் சில பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புண்டு. பேச்சில் நிதானம் தேவை.

விருச்சிகம்
விசாகம் 4: வியாபாரத்தில் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். ஆதாயம் அதிகரிக்கும்.
அனுஷம்: எளிதாக நிறைவேறும் என்று எதிர்பார்த்த முயற்சி ஒன்று இழுபறியாகும்.
கேட்டை: பிரச்னைகளை சமாளித்து எதிர்பார்த்த லாபத்தை அடைவீர்கள். பொருளாதார நிலை உயரும்.

தனுசு
மூலம்: கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவீர்கள். எதிர்பார்த்த வருவாய் உண்டு. பொருளாதார நிலை உயரும்.
பூராடம்: புதிய தொழில் தொடங்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். உங்கள் செல்வாக்கு உயரும்.
உத்திராடம் 1: உங்களின் செல்வாக்கு அதிகரிக்கும். பிறரால் முடிக்க முடியாத ஒரு வேலையை முடிப்பீர்கள்.

மகரம்
உத்திராடம் 2, 3, 4: தந்தையுடன் ஏற்பட்ட சங்கடம் விலகும். எதிர்பார்த்த வருமானம் வந்து சேரும்.
திருவோணம்: புதிய முயற்சிகள் நன்மையாகும். எதிர்பார்த்தவற்றில் அனுகூல நிலை ஏற்படும்.
அவிட்டம் 1, 2: உங்கள் அணுகுமுறையால் ஒரு பிரச்னைக்கு தீர்வு காண்பீர்கள். வருமானம் அதிகரிக்கும்.

கும்பம்
அவிட்டம் 3, 4: பேச்சிலும் செயல்களிலும் நிதானம் தேவை. மற்றவர்களால் உங்கள் மனநிலை பாதிக்கும்.
சதயம்: எதிர்பாராத சங்கடங்கள் தோன்றும். சிறிய வார்த்தைகள் கூட பிரச்னைக்கு காரணமாகி விடும்.
பூரட்டாதி 1, 2, 3: பிறரிடம் வீண் விவாதங்கள் வேண்டாம். அதனால் உங்கள் செல்வாக்கிற்கு பாதகம் ஏற்படும்.

மீனம்
பூரட்டாதி 4: மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தம்பதிகளுக்குள் ஒற்றுமை உண்டாகும். நன்மையான நாள்.
உத்திரட்டாதி: உங்கள் செயலில் விவேகம் இருக்கும். பிறரால் முடிக்க முடியாத வேலைகளை எளிதாக முடிப்பீர்கள்.
ரேவதி: உங்கள் திறமை வெளிப்படும். உறவினரின் பாராட்டிற்கு ஆளாவீர்கள். செல்வாக்கு அதிகரிக்கும்.