நேபாள விமான விபத்தில் பலியானோர் எண்ணிக்கை அதிகரிப்பு வெளியான தகவல்

Kanimoli
1 year ago
 நேபாள விமான விபத்தில் பலியானோர் எண்ணிக்கை அதிகரிப்பு வெளியான தகவல்

மத்திய நேபாளத்தில் உள்ள விமான நிலையம் அருகே 72 பேருடன் சென்ற விமானம் விபத்துக்குள்ளானது. 

இந்த சம்பவத்தில் உயிரிழந்த 40 பேரின் உடல்கள் இன்று பிற்பகல் வரை மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காத்மண்டுவில் இருந்து சுற்றுலா நகரமான பொக்கராவுக்கு சென்ற யெடி ஏர்லைன்ஸ் (yeti Airlines) விமானம் தரையிறங்கும் போது விபத்துக்குள்ளானதில் தீப்பிடித்தது.

விமானத்தில் குறைந்தது 15 வெளிநாட்டினர் மற்றும் நான்கு பணியாளர்ககளும் இருந்துள்ளனர்.

விமான நிலையத்திலிருந்து ஒன்றரை கிலோமீற்றர் தொலைவில் உள்ள சேதி ஆற்றின் பள்ளத்தாக்கில் விபத்துக்குள்ளான இடத்தில் சுமார் 200 நேபாள வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பிரதமர் புஷ்ப கமல் தஹால் தனது அமைச்சரவையின் அவசரக் கூட்டத்தை கூட்டி, மீட்பு நடவடிக்கைகளில் பணியாற்றுமாறு மாநில அமைப்புகளை வலியுறுத்தினார்.

பயணிகளில் 53 பேர் நேபாளத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.

விமானத்தில் ஐந்து இந்தியர்கள், நான்கு ரஷ்யர்கள் மற்றும் இரண்டு கொரியர்கள் இருந்தனர்.  அத்துடன், அயர்லாந்து, அவுஸ்திரேலியா, ஆர்ஜென்டினா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த தலா ஒரு பயணியும் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!