பாக்ஸ் ஆபிஸில் 100 கோடியை நெருங்கிய துணிவு

#Cinema
Prabha Praneetha
3 years ago
பாக்ஸ் ஆபிஸில் 100 கோடியை நெருங்கிய துணிவு

இரண்டு திரைப்படங்களுமே கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ள நிலையில், துணிவு பாக்ஸ் ஆபிஸ் கலெக்‌ஷன் குறித்து தகவல்கள் கிடைத்துள்ளன.

உலகம் முழுவதும் வெளியான துணிவு திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் 100 கோடியை நெருங்கியதாக சொல்லப்படுகிறது.

அஜித் நடிப்பில் ரசிகர்களிடம் அதிகம் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய துணிவு திரைப்படம் 11ம் திகதி வெளியானது.

அதே 11ம் திகதியில் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படமும் ரிலீஸானதால் பாக்ஸ் ஆபிஸில் பயங்கரமான போட்டி காணப்படுகிறது.

அஜித் - ஹெச் வினோத் - போனி கபூர் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ள துணிவு திரைப்படம் கடந்த 11ம் தேதி வெளியானது. வியாழன் ரிலீஸ் என்ற சென்டிமெண்ட்டில் இருந்து விலகி புதன்கிழமையே வெளியானது துணிவு. 

ஹெச் வினோத் இயக்கியுள்ள இந்தப் படத்தில் அஜித்துடன் மஞ்சு வாரியர், சமுத்திரகனி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். 

அஜித் டார்க் டெவில் என்ற நெகட்டிவ் ரோலில் ரசிகர்களுக்கு ஆக்‌ஷன் ட்ரீட் கொடுத்து அசத்தியுள்ளார்.

மியூச்சல் பண்ட், கிரெடிக் கார்டு என வங்கிகளில் நடக்கும் மோசடிகளின் பின்னணி தான் இந்தப் படத்தின் ஒன்லைனாக உருவாகியுள்ளது. 

நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களை கொடுத்த அஜித் - ஹெச் வினோத் கூட்டணி, துணிவில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை வீணடிக்கவில்லை என்றே சொல்லப்படுகிறது. 

அதனால் முதல் நாளில் இருந்த அதே ஓப்பனிங், தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களிலும் கிடைத்து வருகிறது. 

முதல் நாளில் தமிழ்நாட்டில் மட்டும் 22 முதல் 25 கோடி வரை வசூலித்த துணிவு, உலகம் முழுவதும் 35 முதல் 40 கோடி வரை கலெக்‌ஷன் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

 

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4