கணவன் மனைவியை காவுவாங்கிய விமான விபத்து

#world_news #Flight #Accident
Prabha Praneetha
1 year ago
கணவன் மனைவியை காவுவாங்கிய விமான விபத்து

16 ஆண்டுகளுக்கு முன் விமான விபத்தில் கணவன் உயிரிழந்த பின் விமானியாக பயிற்சி பெற்று கடமையாற்றி வந்த நேபாள பெண் துணை விமானி அஞ்சு காதிவாடா கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற யெடி விமான விபத்தில் உயிரிழந்தார்.

எட்டி ஏர்லைன்ஸ் விமானம் 691-ஐ அஞ்சு காதிவாடா துணை விமானியாகச் செலுத்திக்கொண்டிருந்த போது, அது சுற்றுலா நகரமான பொக்காரா அருகே உள்ள ஒரு பள்ளத்தாக்கில் மோதி விபத்துக்குள்ளானது.

கடந்த 30 ஆண்டுகளில் நாட்டில் இடம்பெற்ற மிக மோசமான விமான விபத்து இதுவென நேபாள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

அஞ்சுவின் கணவர் தீபக் போக்ரெலும் இறக்கும் போது எட்டி ஏர்லைன்ஸ் விமானத்தில் துணை விமானியாக பணியாற்றினார்.

அத்துடன், அவரது மரணம்தான் அஞ்சுவை விமானியாக தொழிலைத் தொடர்வதற்கு தூண்டியது.

அவரது இழப்பைக் கண்டு கலங்கி சிறு குழந்தையுடன் தனியாக வாழ்ந்த அஞ்சுவின் துயரம் அவருக்கு ஊக்கமளிக்கும் சக்தியாக மாறியது.

"அவர் ஒரு உறுதியான பெண்மணி, அவர் தனது கனவுகளுக்காக உறுதியாக நின்று தனது கணவரின் கனவுகளையும் நிறைவேற்றினார்" என்று குடும்ப உறுப்பினரான சந்தோஷ் சர்மா கூறுகிறார்.

ஜூன் 2006 இல் மேற்கு நகரமான ஜும்லாவுக்கு அரிசி மற்றும் உலர் உணவை ஏற்றிச் சென்ற ட்வின் ஓட்டர் ப்ராப் விமானத்தின் துணை விமானியாக தீபக் செயற்பாட்டார்.

விமானம் தரையிறங்கிய போது தீப்பிடித்து அதில் இருந்த ஒன்பது பேரும் கொல்லப்பட்டனர்.

நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு பல தடைகளைத் தாண்டி அஞ்சு அமெரிக்காவில் பயிற்சி பெறுவதற்காக சென்று தகுதி பெற்றவுடன், எட்டி ஏர்லைன்ஸ் விமான சேவையில் இணைந்தார். 

வழி கண்டுபிடித்துக் கூட்டிச் செல்லும் துணை விமானிகளாகப் பணியமர்த்தப்பட்ட ஆறு பெண்களில் அஞ்சுவும் ஒருவராவார், மேலும் அவர் 6,400 மணிநேர வான்வழி பயண அனுபவத்தையும் கொண்டுள்ளார்.

 

 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!