வாழ்க்கையில் திடீர் மாற்றங்களை சந்திக்க போகும் இரண்டு ராசிக்காரர்களுக்கான இன்றைய ராசிபலன்

#Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan #ராசிபலன் #இன்றைய_ராசிபலன் #2023
Prasu
1 year ago
வாழ்க்கையில் திடீர் மாற்றங்களை சந்திக்க போகும் இரண்டு ராசிக்காரர்களுக்கான இன்றைய ராசிபலன்

மேஷம்
அசுவினி: மற்றவர்கள் வேலையில் தலையிட்டு ஆலோசனைகள் கூற வேண்டாம். அதனால் சங்கடம் ஏற்படும்.
பரணி: குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் உங்களுக்கும் ஒரு இடைவெளி உண்டாகும். செயல்களில் இழுபறி இருக்கும்.
கார்த்திகை 1: புதிய முயற்சியில் ஈடுபடாதீர்கள். பிறரை நம்பி எந்த பொறுப்பையும் ஒப்படைக்க வேண்டாம்.

ரிஷபம்
கார்த்திகை 2, 3, 4: நீங்கள் விரும்பியதை அடைவீர்கள். உங்கள் முயற்சி லாபமாகும். மகிழ்ச்சி அதிகரிக்கும்
ரோகிணி: சவாலான வேலைகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். நன்மைகள் அதிகரிக்கும்.
மிருகசீரிடம் 1, 2: முக்கிய பிரமுகர் ஆதரவுடன் முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள். வருமானம் அதிகரிக்கும்.

மிதுனம்
மிருகசீரிடம் 3,4: நீண்ட நாள் பிரச்னை ஒன்று முடிவிற்கு வரும். எதிரிகள் உங்களிடம் சரணடைவர்.
திருவாதிரை: எதிரிகளால் ஏற்பட்ட சங்கடங்களை சமாளித்து நன்மை காண்பீர்கள். உங்கள் திறமை வெளிப்படும்.
புனர்பூசம் 1, 2, 3: தொழிலில் முன்னேற்றமான நிலை உண்டாகும். உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும்.

கடகம்
புனர்பூசம் 4: பிள்ளைகள் நலன் குறித்த முயற்சியில் இறங்குவீர்கள். நிதிநிலை உங்களுக்கு சாதகமாகும்.
பூசம்: வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். யோகமான நாள். மகிழ்ச்சி கூடும்.
ஆயில்யம்: நீங்கள் திட்டமிட்டிருந்த ஒரு வேலை அந்நியர்கள் உதவியுடன் இன்று நிறைவேறும்.

சிம்மம்
மகம்: திடீர் பயணமும் சங்கடமும் உண்டாகும் என்றாலும், அதனால் லாப நிலை ஏற்படும்.
பூரம்: நீங்கள் சந்திக்க நினைத்தவர்களை சந்தித்து மகிழ்வீர்கள். நண்பரிடம் உண்டான பிரச்னைகள் தீரும்.
உத்திரம் 1: வியாபாரத்தில் ஏற்பட்ட சங்கடங்களை சரி செய்வீர்கள். தடைகளைத் தாண்டி வெற்றியடைவீர்கள்.

கன்னி
உத்திரம் 2, 3, 4: உங்கள் முயற்சி எளிதாக நிறைவேறும். புதிய பொருள் சேர்க்கை ஏற்படும்.
அஸ்தம்: வியாபாரத்தில் உங்கள் அணுகுமுறை வெற்றியாகும். பணியாளர்களின் ஒத்துழைப்பு லாபத்தை அதிகரிக்கும்.
சித்திரை 1, 2: நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றியாகும். எதிர்பாராத ஆதாயம் உண்டாகும்.

துலாம்
சித்திரை 3, 4: இழுபறியாக இருந்த வேலை முடியும். கணவன் மனைவி இடையே இருந்த பிரச்னை தீரும்.
சுவாதி: தொழிலில் எதிர்பார்த்த வருவாய் உண்டாகும். உறவினர்களால் ஆதாயம் அடைவீர்கள்.
விசாகம் 1, 2, 3: உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு உண்டாகும். பேச்சால் பிறரை கவர்வீர்கள்.

விருச்சிகம்
விசாகம் 4: எளிதாக முடிய வேண்டிய வேலைகளையும் போராடி முடிக்க வேண்டியதாக இருக்கும்.
அனுஷம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் உங்களிடம் வழக்கமான போக்கு இல்லாமல் போகும்.
கேட்டை: நீங்கள் எதிர்பார்த்தவற்றில் தாமதம் உண்டாகும். அடுத்தவர் விவகாரங்களில் தலையிட வேண்டாம்.

தனுசு
மூலம்: அலைச்சல் அதிகரிக்கும். நெருக்கமானவர்களிடம் மனஸ்தாபம் ஏற்படும். நிதானம் தேவை.
பூராடம்: மறைமுக பிரச்னைகள் தொல்லைகளை ஏற்படுத்தும். எதிர்பார்த்தவற்றில் தடைகள் உண்டாகும்.
உத்திராடம் 1: பிறருடன் விவாதங்களில் ஈடுபடாதீர். வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்துச் செல்லுங்கள்.

மகரம்
உத்திராடம் 2, 3, 4: புதிய நட்பின் வழியே உங்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேறி மகிழ்ச்சி காண்பீர்கள்.
திருவோணம்: எதிர்பாராத வருவாய் வந்து மகிழ்வீர்கள். உங்கள் செயல்கள் இன்று வெற்றியாகும்.
அவிட்டம் 1, 2: புதிய வாகனம் வாங்கும் எண்ணம் நிறைவேறும். குடும்பத்தினர் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்.

கும்பம்
அவிட்டம் 3, 4: வியாபாரத்தில் புதிய அணுகுமுறைகளைக் கையாள்வீர்கள். உங்கள் முயற்சி லாபத்தை உண்டாக்கும்.
சதயம்: எதிர்பார்த்த பணம் இன்று உங்கள் கைக்கு வரும். மற்றவர் நலனில் அக்கறை கொள்வீர்கள்.
பூரட்டாதி 1, 2, 3: குடும்பத்தினர் எதிர்பார்ப்பை நிறைவேற்றி பாராட்டு பெறுவீர்கள். வீடு, வாகனத்தை சரி செய்வீர்கள்.

மீனம்
பூரட்டாதி 4: வராமல் தடைபட்டிருந்த பணம் இன்று உங்கள் கைக்கு வரும். குடும்ப பிரச்னை தீரும்.
உத்திரட்டாதி: வியாபாரத்தில் ஏற்பட்ட தேக்க நிலை விலகும். மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கி தெளிவடைவீர்கள்.
ரேவதி: நடக்காது என்று நீங்கள் நினைத்திருந்த செயல் நடந்தேறும். மனதில் இருந்த குழப்பம் நீங்கும்.