பிறப்பு,இறப்பு சான்றிதழ் சம்பந்தமாக வெளியான அறிவித்தல்

Kanimoli
3 years ago
பிறப்பு,இறப்பு சான்றிதழ் சம்பந்தமாக வெளியான அறிவித்தல்

பிறப்பு,இறப்பு சான்றிதழ் சம்பந்தமாக வெளியான அறிவித்தல்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன.

பதிவாளர் நாயகம் திணைக்களத்தின், விண்ணப்ப அவசியத்தன்மை அடிப்படையில், பிறப்பு மற்றும் இறப்புச் சான்றிதழ் விண்ணப்பம், அரச அச்சுத் திணைக்களத்தினால் அச்சிடப்படுவது வழமையான நடைமுறையாகும்.

இந்த நிலையில், பிறப்புச் சான்றிதழ் விண்ணப்பம் முடிவடைந்துள்ளதாக, சமூக வலைதளங்களில் வெளியாகும் தகவல் குறித்து, எமது செய்திச் சேவை, அரச அச்சுத் திணைக்களத்திடம் வினவியது.

இதன்போது பதிலளித்த அந்தத் திணைக்களம், பதிவாளர் நாயக திணைக்களம் வழங்கிய அனைத்து விண்ணப்பக் கட்டளைகளும் அச்சிடப்பட்டு மீள வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தது.

நிலவும் டொலர் பற்றாக்குறை காரணமாக, கடந்த நாட்களில் ஏற்பட்டிருந்த காகிதத் தட்டுப்பாடு, தற்போது கட்டுப்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்த நிலையில், வழங்கப்படுகின்ற அச்சுக் கட்டளைகளுக்கு அமைய, நாளாந்தம் அச்சுப் பணிகள் இடம்பெறுவதாக அரச அச்சுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4