பல்கலைக்கழக மாணவியை கொலை செய்த சந்தேக நபர் விளக்கமறியலில்

#Murder #Court Order #Prison
Prathees
3 years ago
பல்கலைக்கழக மாணவியை கொலை செய்த சந்தேக நபர் விளக்கமறியலில்

கொழும்பு பந்தய மைதானத்தில் பல்கலைக்கழக மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரான இளைஞரை எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

குருந்துவத்தை பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸின் அலுவலகத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து இது இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து குருதுவத்தை பொலிஸார் அறிக்கை சமர்ப்பித்து நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர்.

சந்தேக நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதால், தேசிய மனநல மருத்துவ நிறுவனத்தின் விசேட வைத்தியரிடம் அனுப்பிவைத்து, அவரது மன நிலை குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு கோரியுள்ளதாக சந்தேகநபர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி நீதிமன்றில் தெரிவித்தார்.

கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதவான், சந்தேக நபரை தேசிய மனநல மருத்துவ நிறுவகத்தின் விசேட வைத்தியரிடம் பரிந்துரைத்ததோடு, அறிக்கையை பெற்றுக்கொள்ளுமாறு சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதாக நெத் நியூஸ் நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.

கொழும்புப் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடத்தின் 03ஆம் ஆண்டு மாணவர் ஒருவர் கொழும்பு பந்தயப் பாதையில் வைத்து படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4