வாழ்வில் திடீர் திருப்பங்களை சந்திக்க போகும் இரு ராசிக்காரர்கள் , அதிலும் மகர ராசிக்காரர்களுக்கான ராசிபலன்

#Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan #ராசிபலன் #இன்றைய_ராசிபலன்
Prasu
1 year ago
வாழ்வில் திடீர் திருப்பங்களை சந்திக்க போகும் இரு ராசிக்காரர்கள் , அதிலும் மகர ராசிக்காரர்களுக்கான ராசிபலன்

மேஷம்
அசுவினி: இரண்டு நாட்களாக இழுபறியாக இருந்த முயற்சிகள் இன்று மதியத்திற்கு மேல் நிறைவேறும்.
பரணி: குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். எதிர்பார்த்த உதவிகள் வந்து சேரும்.
கார்த்திகை 1: தடைபட்டிருந்த வேலைகள் முடியும். வியாபாரத்தில் உங்கள் அணுகுமுறை லாபம் தரும்.

ரிஷபம்
கார்த்திகை 2, 3, 4: மதியத்திற்கு மேல் எதிர்பாராத பிரச்னைகள் தோன்றும். தேவையற்ற சங்கடங்களை சந்திப்பீர்கள்.
ரோகிணி: புதிய முயற்சிகள் இன்று கை கொடுக்காமல் போகும். உங்கள் திறமைக்கு சவாலான நாள்.
மிருகசீரிடம் 1, 2: உத்தியோகத்தில் திடீரென்று பிரச்னைகள் தோன்றும். பேச்சில் கவனம் தேவை.

மிதுனம்
மிருகசீரிடம் 3,4: தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு செயலில் முன்னேற்றம் காண்பீர்கள். முயற்சி வெற்றியாகும்.
திருவாதிரை: வியாபாரத்தின் சூட்சுமங்கள் புலப்படும். லாபத்திற்குரிய வழிகளைக் கண்டறிவீர்கள்.
புனர்பூசம் 1, 2, 3: வாழ்க்கைத் துணை வழியே ஆதாயம் உண்டாகும். உங்கள் திறமை வெளிப்படும்.

கடகம்
புனர்பூசம் 4: பொருளாதாரத் தடைகள் விலகும். அரசு வழியிலான முயற்சியில் ஆதாயம் உண்டாகும்.
பூசம்: பணியிடத்தில் உங்கள் செயல்களுக்கு மதிப்பு ஏற்படும். எதிர்பாராத வரவு உண்டாகும்.
ஆயில்யம்: உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். வியாபாரத்தில் ஆதாயம் காண்பீர்கள்.

சிம்மம்
மகம்: எதிர்பார்த்த ஆதாயம் ஏற்படும். தொழிலில் புதிய தொடர்புகள் கிடைத்து லாபம் கிடைக்கும்.
பூரம்: குடும்ப நிலையை உயர்த்த முயற்சிப்பீர்கள். தடைபட்டிருந்த வருவாய் வந்து சேரும்.
உத்திரம் 1: பூர்வீக சொத்தில் இருந்த பிரச்னைகள் தீரும். உங்கள் முயற்சி வெற்றியாகும். லாபமான நாள்.

கன்னி
உத்திரம் 2, 3, 4: தாய்வழி உறவுகள் வழியே ஆதாயம் அடைவீர்கள். முயற்சி ஒன்று அனுகூலமாகும்.
அஸ்தம்: வரன் தேடி வந்தவர்களுக்கு நல்ல செய்தி வரும். நண்பரின் ஒத்துழைப்பால் உங்கள் செயல் வெற்றியாகும்.
சித்திரை 1, 2: திடீர் பயணங்கள் உண்டாகி அலைச்சலை ஏற்படுத்தும் என்றாலும், உங்கள் முயற்சி நிறைவேறும்.

துலாம்
சித்திரை 3, 4: குடும்பத்தினர் நலனில் அக்கறை கொள்வீர்கள். உங்களது நீண்ட நாள் எண்ணம் நிறைவேறும்.
சுவாதி: வியாபாரத்தை விருத்தி செய்வீர்கள். நிதிநிலையில் உயர்வு உண்டாகும்.
விசாகம் 1, 2, 3: விஐபிகள் உதவியுடன் நீங்கள் எதிர்பார்த்தவை நிறைவேறும். யோகமான நாள்.

விருச்சிகம்
விசாகம் 4: விலகிச் சென்ற உறவினர்கள் மீண்டும் உங்களைத் தேடி வருவார்கள். உங்கள் எண்ணம் நிறைவேறும்.
அனுஷம்: தம்பதிகளுக்குள் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். எதிர்பார்த்த செய்தி வந்து சேரும்.
கேட்டை: தடைபட்டிருந்த முயற்சிகள் முடிவிற்கு வரும். நீங்கள் நினைத்ததை நிறைவேற்றி மகிழ்வீர்கள்.

தனுசு
மூலம்: மனதில் குழப்பம் அதிகரிக்கும். உங்கள் பிரச்னைகளை மற்றவரிடம் கொண்டு செல்ல வேண்டாம்.
பூராடம்: உங்களை சீண்டிப் பார்க்க சிலர் முயற்சிப்பார்கள். எந்த நிலையிலும் அமைதியை இழக்காதீர்கள்.
உத்திராடம் 1: உங்கள் வேலையில் மட்டும் கவனம் செலுத்துங்கள். கவனக்குறைவால் சங்கடங்கள் ஏற்படலாம்.

மகரம்
உத்திராடம் 2, 3, 4: பல வழியிலும் செலவுகள் உண்டாகும். வாகனம் பழுதாகி உங்களை சங்கடப்படுத்தும்
திருவோணம்: வருவாயைவிட செலவுகள் அதிகரிக்கும். கடன் கொடுத்தவர்கள் நெருக்கடியை ஏற்படுத்துவார்கள்.
அவிட்டம் 1, 2: உங்கள் செயல்களைப் போராடி முடிக்க வேண்டியதாக இருக்கும். யோசித்து செயல்படுங்கள்.

கும்பம்
அவிட்டம் 3, 4: உங்களது தனித்தன்மையால் மற்றவர் விருப்பத்திற்கு ஆளாவீர்கள். செல்வாக்கு உயரும்.
சதயம்: புதிய தொழில் தொடங்கும் முயற்சி நிறைவேறும். நண்பர் உதவியால் உங்கள் எண்ணம் பூர்த்தியாகும்.
பூரட்டாதி 1, 2, 3: உத்தியோகத்தில் உண்டான தொல்லைகள் விலகும். உங்கள் செல்வாக்கு உயரும்.

மீனம்
பூரட்டாதி 4: வியாபாரத்தில் உங்கள் அணுகுமுறை வெற்றியாகும். புதிய முயற்சி ஒன்றை மேற்கொள்வீர்கள்.
உத்திரட்டாதி: உங்களது நீண்ட நாள் எண்ணம் ஒன்று நிறைவேறும். வருமானம் அதிகரிக்கும். ஆதாயமான நாள்.
ரேவதி: உறவினர்கள் உங்கள் உதவியை எதிர்பார்த்து வருவார்கள். மற்றவரால் மதிக்கப்படுவீர்கள்.