பிரித்தானிய பணக்காரர்களின் மொத்த மதிப்பு தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்

#world_news #UnitedKingdom #Britain #information #Rich
Nila
1 year ago
பிரித்தானிய பணக்காரர்களின் மொத்த மதிப்பு தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்

பிரித்தானிய பணக்காரர்களின் மொத்த மதிப்பு 2.8 டிரில்லியன் பவுண்டுகள் ஆகும்.

Oxfams Survival of the Richest அறிக்கையின் புதிய புள்ளிவிவரங்கள், பணக்காரர்களில் ஒரு வீதம் பேர் சேர்ந்து குறிப்பிடத்தக்க தொகைக்கு மதிப்புடையவர்கள் என்று தெரியவந்துள்ளது.

கோடீஸ்வர சகோதரர்கள் ஸ்ரீ மற்றும் கோபி ஹிந்துஜா, மும்பையை மையமாகக் கொண்ட ஹிந்துஜா குழுமத்தை நடத்தி வருகின்றனர்.

2022 ம் ஆண்டின் சண்டே டைம்ஸ் பணக்காரர்கள் பட்டியலில் அவர்கள் முதலிடத்திற்கு வந்தனர். ஜூன் வரையிலான ஆண்டில் அவர்களின் சொத்து மதிப்பு 28.47 பில்லியன் பவுண்டுகளாக அதிகரித்தது.

ஹிந்துஜா  சகோதரர்கள் வாகனம், எண்ணெய், இரசாயனங்கள், வங்கி, தகவல் தொழில்நுட்பம், ஊடகம் மற்றும் ரியல் எஸ்டேட் போன்றவற்றில் சொந்தமாக வியாபாரம் செய்கின்றனர்.

சர் ஜேம்ஸ் டைசன் மற்றும் அவரது குடும்பத்தினர் 2022 இல் பணக்காரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறினர்.

சொத்து முதலீட்டாளர்களான டேவிட் மற்றும் சைமன் ரூபன் இதற்கிடையில் 22.26 பில்லியன் பவுண்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளனர்.

உக்ரைனில் பிறந்த சர் லியோனார்ட் பிளாவட்னிக் முதலிடத்திலிருந்து நான்காவது இடத்திற்கு தள்ளப்பட்டார்.

2022ம் ஆண்டு பட்டியலின்படி, முதல் 10 இடங்களில் இங்கிலாந்தில் பிறந்த ஒருவர் மட்டுமே இடம்பிடித்திருந்தார்.

இதற்கிடையில், பிரதமர் ரிஷி சுனக் மற்றும் அவரது மனைவி அக்ஷதா மூர்த்தி ஆகியோர் வருடாந்திர சொத்து தரவரிசையில் முதன் முறையாக இடம்பிடித்தனர்.

பிரதமர் மற்றும் அவரது மனைவி அக்ஷதா மூர்த்தி ஆகியோர் 730 மில்லியன் பவுண்டுகள் சொத்துகளுடன் 222 வது இடம் பிடித்திருந்தனர்.

இதன் மூலம், பிரிட்டனின் பணக்காரர்கள் பட்டியலில் இடம்பிடித்த முதல் முன்னணி அரசியல்வாதி என்ற பெருமையைப் பிரதமர் பெற்றார்.

பிரித்தானியாவில் உள்ள 250 பணக்காரர்களின் சமீபத்திய தரவரிசை 2022 இல் இங்கிலாந்தில் 177 பில்லியனர்கள் சாதனை படைத்துள்ளனர்.

2021 மற்றும் 2022 ஆம் ஆண்டு முழுவதும், உலகெங்கிலும் உள்ள பணக்காரர்களில் ஒரு சதவீதம் பேர் 21 டிரில்லியன் பவுண்டுகளை வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!