யாழ்ப்பாணத்தில் குளம் ஒன்றிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு!

#SriLanka #Jaffna #Nallur #Death #Women #Police #லங்கா4
Mayoorikka
3 years ago
யாழ்ப்பாணத்தில் குளம் ஒன்றிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு!

யாழ்ப்பாணம் அரியாலை நாயன்மார்கட்டு குளத்தில் இருந்து பெண் ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சடலம் குளத்தில் இருந்து மிதந்து கரையை அடைந்துள்ள நிலையில் ஊர் மக்களால் யாழ். பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. எனினும் சடலமாக காணப்படுவது யார் என இதுவரை அடையாளம் காணப்படவில்லை.

பொலிஸார் சடலத்தை அடையாளம் காண்பது தொடர்பாகவும் மரணத்திற்கான காரணம் தொடர்பாகவும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4